தாய்லாந்து குகையில் இருந்து முதற்கட்டமாக 4 சிறுவர்கள் மீட்பு..!
தாய்லாந்து குகையில் இருந்து முதற்கட்டமாக 2 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள் கால்பந்து அணியைச் சேர்ந்த 2 சிறுவர்கள் வெளியே அழைத்துவரப்பட்டுள்ளனர்.
அந்த சிறுவர்களை மீட்க வேண்டும் என்பதற்காக உலகம் முழுவதும் இருந்து பிரார்தனை செய்து வருகின்றனர். மேலும் சிறுவர்களை மீட்கும் பணியில், தாய்லாந்து பிரிட்டன் அமெரிக்கா உள்ளிட்ட பன்னாடு மீட்புப்குழுவை சேர்ந்தவர்கள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் குகையில் சிக்கியிருப்பவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால், அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் உணவு உள்ளே கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இரு சிறுவர்களை குகையில் இருந்து மீட்டு உள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பதால், மேலும் குகைக்குள் தண்ணீர் அதிகரிக்க கூடும் என்ற நிலையும் உள்ளது.எனவே எப்போது மற்ற சிறுவர்களை மீட்கப்படும் என சரியாக கூற முடியாத நிலை உள்ளது என பிபிசி செய்தி நிறுவன செய்தியாளர் தெரிவித்து உள்ளார்.