வரலாறு காணாத மழையால் ஜப்பான் வெள்ள நீரில் மிதக்கிறது. ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 100-க்கம் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி மாயமாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து அங்கு மழை வெளுத்து வாங்கி வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.