கிரிப்டோ கிங் என்று அழைக்கப்பட்ட சாம் பேங்க்மேன்-ஃப்ரைட், தற்போது பணமோசடி குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்
உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளில் ஒன்றை நடத்தி வந்த சாம் பேங்க்மேன்-ஃப்ரைட், தற்போது பணமோசடி குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். சாம் பாங்க்மேன்-ஃப்ரைட் முதலீட்டாளர்கள் மற்றும் வங்கிகளிடம் பொய் கூறி ஏமாற்றியதாகவும், அவர் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் FTX-ல் இருந்து பில்லியன் கணக்கான டாலர்களைத் திருடியதாக எழுந்த புகார்கள் எழுந்தது.. மேலும் அவர் மீது மோசடி மற்றும் பணமோசடி என மொத்தம் 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த புகார்களின் 31 வயதான அவர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார், அவரது நிறுவனம், FTX, திவாலானது.
மேலும் அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், நியூயார்க் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. ஒரு மாத கால விசாரணையின் முடிவில் சாம் பேங்க்மேன்-ஃப்ரைட் மோசடி மற்றும் பணமோசடி செய்த குற்றவாளி என்று நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
முன்னாள பெரும்பணக்காரர் மற்றும் கிரிப்டோ துறையின் மிகவும் பொது முகங்களில் ஒருவரான பேங்க்மேன்-ஃப்ரைடுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சியாக இது கருதப்படுகிறது. அவருக்கு பல ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.
அமெரிக்க வழக்கறிஞர் டாமியன் வில்லியம்ஸ் வெளியிட்ட அறிக்கையில் ."அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய நிதி மோசடிகளில் ஒன்றை சாம் பேங்க்மேன்-ஃப்ரைட் செய்துள்ளார். இந்த வழக்கு எப்போதுமே பொய், ஏமாற்றுதல் மற்றும் திருடுவது பற்றியது, அதற்கு எங்களுக்கு பொறுமை இல்லை," என்று அவர் மேலும் கூறினார்.
இந்த தீர்ப்புக்குப் பிறகு சாம் பேங்க்மான் பிரைடின் வழக்கறிஞர் மார்க் கோஹன் பேசிய போது: " நீதிபதியின் முடிவை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் முடிவில் நாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம். சா, பேங்க்மேன்-ஃபிரைட் தான் குற்றவாளி இல்லை என்று கூறுகிறது., மேலும் அவர் மீதான குற்றச்சாட்டுகளை தீவிரமாக எதிர்த்துப் போராடுவார்" என்று கூறினார்.
பேங்க்மேன் ஃப்ரைடின் செய்தித் தொடர்பாளர், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளாரா என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. பேங்க்மேன் ஃப்ரைடின் முன்னாள் காதலி கரோலின் எலிசன் உட்பட அவரது முன்னாள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் சகாக்கள் மூவர் குற்றத்தை ஒப்புக்கொண்டால் தங்களின் தண்டனை குறையும் என்ற நம்பிக்கையில் அவருக்கு எதிராக சாட்சியமளிக்க ஒப்புக்கொண்ட பிறகு, ஆரம்பத்திலிருந்தே அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. எனினும் அவர்களுக்கு என்ன தண்டனை என்பது விரைவில் அறிவிக்கப்படும்.
பாங்க்மேன்-ஃப்ரைடின் கிரிப்டோ வர்த்தக நிறுவனமான அலமேடா ரிசர்ச், ஆரம்பம் முதலே FTX வாடிக்கையாளர்களின் சார்பாக வைப்புகளைப் பெற்றதற்கான ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்த நிதியைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, பாங்க்மேன்-ஃபிரைட், கன் கொடுத்தவர்களுக்குத் திருப்பிச் செலுத்தவும், சொத்துக்களை வாங்கவும் முதலீடுகள் மற்றும் அரசியல் நன்கொடைகள் செய்யவும் பணத்தைச் செலவிட்டார்.
இதனிடையே FTX இன் விரைவான வளர்ச்சி மற்றும் கடந்த ஆண்டு அவர் செய்த ஒப்பந்தம் ஆகியவை அவருக்கு "கிரிப்டோவின் ராஜா" என்ற பெயரைப் பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.