சிங்கப்பூரில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் லீ சியன் லூங், கொவிட்-19க்கு எதிரான மேம்படுத்தப்பட்ட தடுப்பூசியை சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் போட்டுக்கொண்டார். மக்களும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சில நாட்களாக சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அண்மையில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட மேம்படுத்தப்பட்ட புதிய தடுப்பூசியை சிங்கப்பூர் நாட்டு பிரதமர் லீ சியன் லூங் போட்டுக்கொண்டுள்ளால். இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள குறிப்பில், இந்த புதிய மேம்படுத்தப்பட்ட தடுப்பூசி , ஓமிக்ரான் XBB 1.5 கிருமியின் திரிபு அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
சேர்த்துவைத்த மொத்தமும் போச்சு.. ஆன்லைன் மோசடியில் சிக்கிய முதியவர் - சிங்கப்பூரர்களே ஜாக்கிரதையா இருங்க!
மேலும், இந்த மேம்படுத்தப்பட்ட புதிய தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதால் கொரோனா வைரஸ் கிருமியின் தற்போதைய திரிபுக்கும், இனிவரும் கொரோனா வைரஸ் திரிபுகளுக்கும் எதிராக மேம்பட்ட பாதுகாப்பை வழங்கும் என கோவிட்-19 தடுப்பூசி நிபுணர்க் குழு பரிந்துரை செய்தை பிரதமர் லீ சுட்டிக்காட்டியுள்ளார்.
தான் தடுப்பூசி போட்டுக்கொண்டதைப் போல், முன்னதாக கோவிட்-19 வைரஸ் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட சிலர், இந்த மேம்படுத்தப்பட்ட புதிய தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டுமா? என்று கேள்வி எழுப்பி பதிலளித்துள்ள பிரதமர் லீ சியன் லூங், “தனக்கு ஏற்பட்ட நோய் அறிகுறிகள் சக்தி மிக தீவிரமாக இல்லை என்று குறிப்பிட்ட அவர், அடுதடுத்த நோய் தொற்றுகளில் இருந்து உங்களை பாதுக்காத்து கொள்ள இந்த மேம்படுத்தப்பட்ட தடுப்பூசியை போட்டுக்கொள்வது அவசிய் என குறிப்பிட்டுள்ளார்,
மேலும், இந்த புதிய தடுப்பூசியை 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள், மருத்துவரீதியாக எளிதில் பாதிக்கப்படும் சூழ்நிலையில் உள்ளவர்கள், ஆகியோர் தடுப்பூசியை தவறாமல் போட்டுக்கொள்ள பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தியுள்ளார்.
undefined
சிங்கப்பூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு! கடந்த ஆண்டை விட 5% அதிகரிப்பு!
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D