Halloween பார்ட்டியில் வித்தியசாமான முறையில் நிச்சயத்தார்த்தம் செய்த விஜய் மல்லையா மகன்.. வைரல் போட்டோஸ்

By Ramya s  |  First Published Nov 2, 2023, 11:56 AM IST

Halloween 2023 விழாவில் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த்தா - ஜாஸ்மின் நிச்சயதார்த்த விழா நடந்தது.


அமெரிக்காவின் கல்ஃபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் Halloween 2023 விழாவில் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த்தா - ஜாஸ்மின் நிச்சயதார்த்த விழா நடந்தது. அந்த நிகழ்ச்சியில் விஜய் மல்லையா தனது காதலிக்கு தனித்துவமான முறையில் புரோபஸ் செய்தார்.. அவர்களின் திருமணத்திற்கான நிச்சயதார்த்தமும் வித்தியாசமான முறையில் நடைபெற்றது.

நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மந்திரவாதி உடை அணிந்திருக்கும் ஜாஸ்மினுக்கு சித்தார்த்தா மண்டியிட்டு தனது காதலை சொல்வதையும், ஜாஸ்மின் தனது நிச்சயதார்த்த மோதிரத்தைக் காட்டும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்..

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Tap to resize

Latest Videos

A post shared by Sid (@sidmallya)

 

மேலும் சித்தார்தா - ஜாஸ்மின் ஜோடி ஹாலோவீன் தீம் கொண்ட ஆடைகளை அணிந்திருந்தனர்.. சித்தார்த் மல்லையா ஒரு நடிகரும் மாடலும் ஆவார். தனது தந்தை, விஜய் மல்லையா, முதன்மையாக மதுபான வணிகத்தில் உள்ள இந்திய நிறுவனமான UB குழுமத்தின் முன்னாள் தலைவர் ஆவார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

சித்தார்த்தா கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்தார், லண்டன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வளர்ந்தார். அவர் வெலிங்டன் கல்லூரி மற்றும் லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் படித்தார், பின்னர் ராயல் சென்ட்ரல் ஸ்கூல் ஆஃப் ஸ்பீச் அண்ட் டிராமாவில் நடிப்பு பயின்றார்..

இளம் ஆசிரியையை தப்பா போட்டோ எடுத்த ஆசிரியர்.. கையும் களவுமாக பிடித்த மாணவன் - சாருக்கு வைக்கப்பட்ட ஆப்பு!

நாடகப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு, சித்தார்த்தா ஒரு மாடலாகவும் நடிகராகவும் பணியாற்றத் தொடங்கினார். அவர் பாலியல் நகைச்சுவைத் திரைப்படமான பிரம்மன் நாமன் உட்பட பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார். ஆன்லைன் வீடியோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அவர், கின்னஸின் சந்தைப்படுத்தல் மேலாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!