ஜிம்முக்குள் கத்தி குத்து.. அமெரிக்காவில் தாக்கப்பட்ட இந்திய மாணவர் - பிழைக்க 5% மட்டுமே வாய்ப்பு - டாக்டர்ஸ்!

By Ansgar R  |  First Published Nov 3, 2023, 8:14 AM IST

Indiana America : அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் 24 வயது இந்திய மாணவர் ஒருவர், கத்தியால் குத்தப்பட்டு ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருவதாக NWIU டைம்ஸை வெளியிட்ட செய்தி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 29ம் தேதி, காலை இந்தியானாவின் வால்பரைசோ நகரில் உள்ள பொது உடற்பயிற்சி கூடத்தில் உள்ளே உள்ள ஒரு இடத்தில் தான் ஜோர்டான் ஆண்ட்ரேட் (24 வயது) என்ற தாக்குதல்தாரி, அந்த இந்திய மாணவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் குறித்த விசாரணை நடந்து வருகிறது.

இந்த கொடூர சம்பவத்திற்குப் பிறகு, அந்த 24 வயது நபர் ஆண்ட்ரேட் கைது செய்யப்பட்டார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது, மேலும் "கொடிய ஆயுதம் பயன்படுத்தியது மற்றும் கொலை முயற்சி ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட மோசமான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் என்று அந்நகர போலீசார் தெரிவித்தனர்.

Tap to resize

Latest Videos

புதைபடிவ எரிபொருள்.. தேடி சென்ற விஞ்ஞானிகள்.. ஆனால் கிடைத்தது என்ன தெறியுமா?

"இந்திய மாணவர் வருண், கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார், காயத்தின் தீவிரம் காரணமாக அவர் ஃபோர்ட் வெய்ன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மேலும் அவர் உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் 0 முதல் 5 சதவிகிதம் வரை வாய்ப்பு அளிக்கப்பட்டதாகக் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது PTI அளித்த தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியர்கள் ஹமாஸுக்கு எதிராக நிற்க வேண்டும்! ஹமாஸ் தலைவரின் மகன் மொசாப் கோரிக்கை

அந்நாட்டு செய்தி நிறுவனத்தின் அறிக்கைபடி, ஆண்ட்ரேட், சம்பவத்தன்று காலை மசாஜ் செய்யக் சென்றதாகவும், ஆனால் மசாஜ் அறையில் தனக்குத் தெரியாத, ஆனால் "கொஞ்சம் வித்தியாசமான" நபரைக் கண்டதாகவும் காவல்துறையிடம் கூறியுள்ளார். அங்கிருந்த மனிதர் தனக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்று எண்ணி தான் அவ்வாறு நடந்துகொண்டதாகவும் கூறியுள்ளார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!