sri lanka crisis: நெருக்கடிக்கு மத்தியில் முழு ஊரடங்கு.. அடுத்தடுத்த சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் இலங்கை!

By Kevin Kaarki  |  First Published Apr 2, 2022, 5:31 PM IST

sri lanka crisis:மக்கள் போராட்டங்களில் வன்முறை வெடிப்பதை அடுத்து இலங்கையில் அவசர நிலை நேற்று பிரகடனப்படுத்தப்பட்டது.


இலங்கையில் இன்று மாலை 6 மணியில் இருந்து தங்கள் கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. கடும் பொருளாதார நெருக்கடியை கண்டித்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை எதிர்த்து பொது மக்கள் ஒன்று திரண்டு மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டதை அடுத்து ஊரடங்கு முடிவை அந்நாட்டு அரசு கையில் எடுத்துள்ளது.

முன்னதாக மக்கள் போராட்டங்களில் வன்முறை வெடிப்பதை அடுத்து இலங்கையில் அவசர நிலை நேற்று பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், மக்கள் அதிபர் ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி நாளை கடும் போராட்டங்களில் ஈடுபட திட்டமிட்டு வந்தனர். 

Tap to resize

Latest Videos

பாதுகாப்பு:

தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதை அடுத்து நாட்டின் தலைநகர் கொலம்போவில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. சில நாட்களுக்கு முன் போராட்டக்காரர்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டின் முன் திரண்டை வீட்டை முற்றுகையிட முயன்றனர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ராணுவ வீகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. பின் காவல் துறையினர் தண்ணீர் புகை குண்டை வீசுயம், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் நான்கு மணி நேரத்திற்கு பின் போராட்டத்தை நிறுத்தினர். 

இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சுமார் 45-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதை அடுத்து நேற்று இலங்கை தலைநகர் கொலம்போவில் நேற்று மீண்டும் போராட்டம் வெடித்தது. இதனால் இலங்கையில் நேற்று தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. நிலையை சற்று கட்டுக்குள் வந்ததை அடுத்து இன்று தலைநகர் கொலம்போவில் கடும் பாதுகாப்புடன் கடைகள் திறக்கப்பட்டன. 

டீசல் தட்டுப்பாடு:

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன் அந்நாட்டு அரசு டீசல் வாங்க மக்கள் யாரும் முயற்சிக்க வேண்டாம் என வெளிப்படையாக அறிவித்தது. இதன் காரணமாக இந்தியா சார்பில் இலங்கைக்கு 40 ஆயிரம் லிட்டர் டீசல் வழங்க இந்திய அரசு முடிவு செய்தது. அதன்படி 40 லிட்டர் டீசல் கொண்ட சரக்கு கப்பல் இலங்கைக்கு இன்று சென்றது. 

இதை அடுத்து இலங்கையில் இன்று மாலையில் இருந்து டீசல் வினியோகம் துவங்கும் என தெரிகிறது. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர மின்விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இலங்கையில் தற்போது தினமும் 13 மணி நேரம் அளவிற்கு மின்வெட்டு ஏற்படுகிறது. 

அரிசி:

டீசல் மட்டுமின்றி இந்தியா சார்பில் இலங்கைக்கு 40 ஆயிரம் டன் அரிசி வழங்குவதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அரிசி அனுப்பப்பட இருக்கிறது.

click me!