எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடை அடுத்து ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டை முற்றுகையிட்டனர்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு அதிபர் கோப்பதய ராஜபக்சே வீட்டின் முன் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், அந்நாட்டு அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தி இருக்கிறது. இதை அடுத்து தலைநகர் கொலம்போவில் உச்சக்கட்ட பாதுகாப்புடன் கடைகள் திறக்கப்பட்டன. அவசர நிலை அமலுக்கு வந்ததும் மூடப்பட்ட கடைகள் தற்போது ராணுவ பாதுகாப்புடன் திறக்கப்பட்டன.
நேற்று இலங்கையில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலையை அடுத்து, சந்தேகத்திற்கிடமான நபர்களை கைது செய்ய ராணுவத்தினருக்கு அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே சிறப்பு அனுமதி அளித்து இருக்கிறார். அவசர நிலையை பிரகடனப்படுத்துவதன் மூலம் அமைதியை ஏற்படுத்தி, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்க முடியும் என கோத்தபய ராஜபக்சே தெரிவித்தார்.
undefined
வன்முறை:
எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடை அடுத்து ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டை முற்றுகையிட்டனர். இந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது அடுத்து அந்த பகுதி முழுக்க போர்க்களம் போன்று காட்சியளித்தது. இதன் காரணமாக கொலம்போ நகரின் பல பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நான்கு மணி நேர போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக பலரை காவல் துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த நிலையில், நேற்று மீண்டும் அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் அவரை பதவி விலக வலியுறுத்தி வந்தனர். தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்ததை அடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவதாக அறிவித்தார்.
உரிமை:
"அமைதியாக போராட்டம் நடத்த இலங்கை மக்களுக்கு அனைத்து உரிமைகளும் உல்லது. போராட்டம் நடத்துவது ஒருவரின் அடிப்படை உரிமை ஆகும். அங்குள்ள கள நிலவரத்தை உற்று பார்த்து கொண்டு இருக்கிறேன். வரும் நாட்களில் அங்கு அமைதி திரும்பும், அதிகம் எதிர்பார்க்கப்படும் பொருளாதார சீரடைவு ஏற்பட்டு, பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் நிம்மதி கிடைக்கும் என நம்புகிறேன்," என்று இலங்கை நாட்டுக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் தனது டுவிட்டரில் தெரிவித்து இருக்கிறார்.
சுமார் 2 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வரும் இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு, மின் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மின் தட்டுப்பாடு காரணமாக அந்நாட்டில் தினமும் 13 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதோடு, இரவு நேரங்களில் சாலையில் மின்விளக்கும் போடப்படுவதில்லை.
கொரோனா வைரஸ் பாதிப்பு:
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இலங்கையில் சுற்றுலா பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாகவும், அடுத்தடுத்த அரசாங்கங்களின் மோசமான நிதி மேலான்மை போன்ற காரணங்களால் பொருளாதார நெருக்கடி சூழல் ஏற்பட்டது. இதில் இருந்து மீண்டு வர இலங்கை அரசு இந்தியா மற்றும் சீனாவிடம் புதிதாக கடன் வழங்குமாறு கேட்டுள்ளது.
இதுதவிர இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் இந்தியாவில் இருந்து சுமார் 40 ஆயிரம் டன் அரசி இலங்கைக்கு அனுப்பப்பட இருக்கிறது. இவற்றை அனுப்புவதற்கான ஆயத்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.