Flight Travel : விமானத்துக்குள் ஏடாகூட வேலை பார்த்த காதலர்கள்.. கடுப்பான சக பயணி போட்ட போஸ்ட் - செம வைரல்!

Ansgar R |  
Published : Apr 11, 2024, 06:01 PM IST
Flight Travel : விமானத்துக்குள் ஏடாகூட வேலை பார்த்த காதலர்கள்.. கடுப்பான சக பயணி போட்ட போஸ்ட் - செம வைரல்!

சுருக்கம்

Couples in Flight : விமானத்தில் பயணிக்கும் போது, ​​பயணிகள் சில அடிப்படை நெறிமுறைகளைப் பின்பற்றி, தங்களைச் சுற்றி அமர்ந்திருக்கும் எவருக்கும் இடையூறு செய்யாமலோ அல்லது தொந்தரவு செய்யாமலோ தங்கள் பயணத்தை மேற்கொள்ளவேண்டும். காரணம் அது பொதுவெளி.

ஆனால், சமீபத்தில் ஒரு பயணி ஒருவர் தனது விமான பயணத்தின்போது ஒரு ஜோடி, ஒருவரையொருவர் நெருக்கமாகப் கட்டிப்பிடித்துக்கொண்டு நேரத்தை செலவிட்டு வந்தது, பெரும் முக சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சக பயணி பகிர்ந்து வீடியோ ஒன்று இப்பொது இணையத்தில் வைரலாகியுள்ளது. அது நெட்டிசன்கள் மத்தியில் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த பயணியின் கூற்றுப்படி, அடையாளம் தெரியாத அந்த ஜோடிகள் அந்த விமானத்தின் முழு பயண நேரத்தின்போதும் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். "விமானத்தில் எனது பார்வைக்கு முன் நடப்பதை நம்ப முடியவில்லை, சுமார் 4 மணி நேர விமான பயணம் முழுவதும் இப்படித்தான் இருந்தது," என்று அந்த X பயனர் தன் பதிவில் எழுதியுள்ளார். 

உலகிலேயே விலை உயர்ந்த ஷூ இது தான்.. விலையை கேட்டால் ஷாக் ஆயிடுவீங்க.. எவ்வளவு தெரியுமா?

அவரது அந்த பதிவு சுமார் 21 மில்லியன் பார்வைகளை பெற்று வைரலாகியுள்ளது, நெட்டிசன்கள் வரிசையாக தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். பெரும்பாலான பயனர்கள் அந்த படங்களை பார்த்து மகிழ்ந்துள்ளனர் என்றே கூறலாம். இருப்பினும், சிலர், அந்த தம்பதியரின் நடத்தை சகித்துக்கொள்ளமுடியாதது என்றும், இது போன்ற விஷயங்களை யாரும் ஊக்குவிக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். 

மேலும் ஒரு X பயனர் எழுதுகையில், ''விமானப் பணிப்பெண் எப்படி எதுவும் சொல்லவில்லை'' என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதே நேரத்தில் மற்றொரு எழுதிய பதிவில் "விமானத்தில் குழந்தை அழுது கொண்டிருந்தாலோ அல்லது என் இடத்தில் நீங்கள் உங்கள் இருக்கையை சாய்த்துக்கொண்டாலோ மட்டுமே எனக்கு பிரச்சனை'' என்றும் கூறியுள்ளார். 

''உங்கள் துணையோடு நீங்கள் பேசுவது, ஒருவரை ஒருவர் அரவணைத்துகொள்வது என்பது நல்ல விஷயம் தான். ஆனால் அதை பலர் முன், அதுவும் ஒரு விமானத்தில் இப்படி நடந்துகொள்வது ஏற்புடையது அல்ல என்றும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோ இப்பொது மிகப்பெரிய அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றது.

“பிரதமர் மோடியை சந்திக்க ஆர்வமாக உள்ளேன்..” இந்தியா வருகையை உறுதி செய்த எலான் மஸ்க்..

PREV
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?