யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம், செல்லப்பிராணிகளை விமானத்தில் அழைத்துச் செல்ல அனுமதிக்கிறது. பயணிகள் தங்ள் செல்லப்பிராணிகளை இருக்கைக்கு அடியில் இருக்கும் பகுதியில் மட்டும் இருக்கலாம். ஆனால், உள்நாட்டு விமானங்களில் மட்டுமே இந்த அனுமதி உண்டு.
அமெரிக்காவின் சியாட்டில் நகருக்குச் சென்ற விமானம், நாய் மலம் கழித்ததால் டல்லாஸுக்கு மீண்டும் திருப்பிவிடப்பட்டது. வெள்ளிக்கிழமை ஹூஸ்டனில் இருந்து புறப்பட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து ரெட்இட் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ஒரு பயனர், "முதல் வகுப்பில் இருந்த நாய் மலம் கழித்ததால் விமானம் டல்லாஸுக்குத் திருப்பிவிடப்பட்டது. தரைக் குழுவினர் 2 மணி நேரத்திற்கும் மேலாக காகித துண்டுகளால் தரைவிரிப்புகளை சுத்தம் செய்தனர்" என்று கூறியுள்ளார்.
undefined
"துர்நாற்றம் என்னால் சகிக்க முடியவில்லை. நாற்றம் அவ்வளவு எளிதாகப் போகவில்லை. முதல் வகுப்பு பயன்படுத்த முடியாததாக அறிவிக்கப்பட்டது. உணவைக் கூடச் சாப்பிட முடியவில்லை" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம், செல்லப்பிராணிகளை விமானத்தில் அழைத்துச் செல்ல அனுமதிக்கிறது. பயணிகள் தங்ள் செல்லப்பிராணிகளை இருக்கைக்கு அடியில் இருக்கும் பகுதியில் மட்டும் இருக்கலாம். ஆனால், உள்நாட்டு விமானங்களில் மட்டுமே இந்த அனுமதி உண்டு.
இந்தப் பதிவு பகிரப்பட்டதிலிருந்து, பல சமூக ஊடக பயனர்களிடமிருந்து நிறைய எதிர்வினைகள் குவித்துள்ளன.
"நான் ஒரு முறை விமானத்தில் இருந்த இடத்தில் ஒரு சர்வீஸ் நாய் இருந்தது. விமானம் பரபரப்பாக இருந்தது. அந்த விமானம் தரையிறங்கி கேட்டிற்கு வந்ததும், வெளியேறும் கதவு திறந்ததும், அந்த நாய் ஜெட்வே முழுவதும் மலம் கழித்துவிட்டது. விமானத்தை சுத்தம் செய்துவிட்டு இறங்க 15 நிமிடம் தாமதமாகிவிட்டது" என்று ஒரு பயனர் தனது அனுபவத்தைக் கூறியுள்ளார்.
இன்னொரு பயனர், "நான் என் நாய்களை நேசிக்கிறேன், பொதுவாக மக்களை விட நாய்களை விரும்புகிறேன். உரிமையாளர் உடன் மட்டுமே நாய் இருக்க வேண்டும்" என்று அட்வைஸ் செய்திருகிகறார்.
"ஆனால், நீங்கள் நாயுடன் பறந்து செல்ல விரும்புகிறீர்கள் அதை கேரியரில் வைத்து, இலக்கை அடையும் வரை வைத்திருக்க விரும்புகிறீர்கள்" என்று மற்றொருவர் பயனர் குறை கூறியுள்ளார்.
"மன்னிக்கவும், ஆனால் மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளை கொண்டுவராமல் இருக்க வேண்டும்" என்று இன்னொரு பயனரும் கருத்து தெரிவித்துள்ளார். செல்லப்பிராணிகள் இல்லாமல் பயணிக்க முடியாவிட்டால் விமானத்திலேயே செல்ல வேண்டாம். " என்று ஒருவர் சொல்கிறார்.
7வது முறையாக சென்னை வந்த பிரதமர் மோடி... தி.நகர் முதல் தேனாம்பேட்டை வரை ரோடு ஷோ!