coronavirus: கொரோனாவிலிருந்து பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு நரம்பில் ரத்தம் உறைதல், கால்பகுதியில் ரத்தம் உறைதல், நுரையீரலில் ரத்தம் உறைதல் போன்றவை 6 மாதங்கள் வரை நீடிக்கும் வாய்ப்பு அதிகம். சில நேரங்களில் 2 மாதங்கள்வரை ரத்தம் வருதலும் இருக்கும் என்று ஆய்வில்தெரிய வந்துள்ளது.
கொரோனாவிலிருந்து பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு நரம்பில் ரத்தம் உறைதல், கால்பகுதியில் ரத்தம் உறைதல், நுரையீரலில் ரத்தம் உறைதல் போன்றவை 6 மாதங்கள் வரை நீடிக்கும் வாய்ப்பு அதிகம். சில நேரங்களில் 2 மாதங்கள்வரை ரத்தம் வருதலும் இருக்கும் என்று ஆய்வில்தெரிய வந்துள்ளது.
ரத்தம் உறைதல்
undefined
ஸ்வீடனில் உள்ள உமேயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஆய்வறிக்கையை தி பிஎம்ஜே ஜர்னலில் வெளியிட்டுள்ளனர். அதிலும் “ கொரோனாவில் பாதி்க்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப்பின் மீண்டவர்களுக்கு ரத்த உறைதல் பிரச்சினை தீவிரமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேநேரம் ரத்தம் உறைதல் எவ்வாறு தடுப்பது, குறிப்பாக கொரோவில் அதிகம் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் அதைத் தடுக்கும் முறையையும், தடுப்பூசி செலுத்துவதை வலுப்படுத்துவதையும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
10 லட்சம் பேர்
இந்த ஆய்வு கடந்த2020 பிப்ரவரி 1 முதல் 2021, மே 25 ம்தேதிவரை கொரோனாவில் பாதிக்கப்பட்ட 10 லட்சம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இவர்கள் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை கொரோனாவில் பாதிக்கப்படாத 40 லட்சம் பேரின் உடல் மாதிரிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது.
இதில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு தீவிரமான ரத்தம்உறைதல் ஏற்படும் வாய்ப்பு அதிகம். ஆனால், எத்தனை நாட்களுக்கு தீவிரம் அதிகரிக்கும், கொரோனா அலை மீண்டும் வந்தால் இதில் மாற்றம்இருக்குமா என்பதற்குஆதாரங்கள் இல்லை. ஆனால் நரம்புகளில் ரத்தம் உறைதல், நுரையீரல் பகுதிகளில் ரத்தம் உறைதல் போன்றவை கொரோனா பாதிப்புக்குப்பின் வரும்வாய்ப்பு அதிகம்.
நுரையீலில் ரத்தம் உறைதல்
இந்த ஆய்வில் நரம்புகளில் ரத்தம் உறைதலால் பாதிக்கப்படுவது 5 மடங்கு அதிகரித்துள்ளது, நுரையீரலில் ரத்தம் கட்டுதல் இடர்33 மடங்கு அதிகரித்துள்ளது, ரத்தம் வருதல் என்பது 30 நாட்கள்வரைஇருக்கிறது.
முதல் அலை
கொரோனா 2-வது அலை, 3-வது அலையைவிட, முதல் அலையில் தீவிரமாக பாதி்க்கப்பட்டு மீண்டவர்களுக்கு இந்த ரத்தம் உறைதல் ஆபத்து அதிகம். தடுப்பூசிகளை முறையாக் செலுத்துதல், முறையான சிகிச்சை மூலம் ரத்தம் உறைதலைத் தடுக்க முடியும்.
லேசான கொரோனாவில் பாதிக்கப்பட்டோர், மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் தனிமையில் இருந்தோர், ஆகியோருக்கு ரத்தம் உறைதல் வருவதும், நரம்புகளில் ரத்தம் உறைதல், நுரையீரலில் ரத்தம் உறைதல் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். இது முதல்கட்ட ஆய்வுதான் என்பதால், முழுமையான காரணங்களை விளக்க முடியாது
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது