தமிழக மீனவர்கள் பிணையில் செல்ல ரூ.1கோடி செலுத்துங்கள்... இலங்கை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

By Narendran S  |  First Published Apr 7, 2022, 4:25 PM IST

தமிழக மீனவர்கள் பிணையில் செல்ல வேண்டுமென்றால் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


தமிழக மீனவர்கள் பிணையில் செல்ல வேண்டுமென்றால் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் அனுமதிச் சீட்டு பெற்று மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி மார்க்கோ என்பவருக்கு சொந்தமான விசைப்படகை தடுத்து நிறுத்தினர். அதிலிருந்த 12 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை அதிகாரிகள், விசைப்படகுடன் மயிலிட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்டுள்ள 12 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tap to resize

Latest Videos

இலங்கை கடற்படையின் இச்செயலுக்கு ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரையும் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக இலங்கை அரசு விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். அதுமட்டுமின்றி மீனவர் சங்கத்தினர், படகுகளையும் விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். இதனிடையே இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்குப் பிணை வழங்க இந்திய மதிப்பில் 1 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கையில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக  ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் இலங்கை நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இன்று கிளிநொச்சி நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் தமிழக மீனவர்களை  விடுவிக்க வேண்டும் என்றால் பிணைத் தொகையாக ஒவ்வொருவருக்கும் இந்திய மதிப்பில் ரூ.1 கோடி தர வேண்டும் என்றதுடன் மீனவர்களை வருகிற மே 12 ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

click me!