இந்நிலையில் இக்குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில், சீனாவைச் சேர்ந்த வைராலஜி விஞ்ஞானி லீ மெங் யான் இந்தியா டுடே ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே சார்ஸ் மற்றும் கொரோனா வைரஸ்களை பயோ ஆயுதமாக பயன்படுத்துவது குறித்து சீன விஞ்ஞானிகள் -மக்கள் விடுதலை ராணுவத்திற்கு இடையே விவாதம் நடந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை ஆவணம் ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல கொரோனா என்ற வைரஸை செயற்கையாக உருவாக்கி மூன்றாம் உலகப் போரை நடத்த சீனா திட்டமிட்டிருந்ததாகவும் அது குறித்து அந்நாட்டு விஞ்ஞானிகளும், ராணுவமும் தீவாரமாக ஆலோசித்து வந்ததாகவும் ஆஸ்திரேலிய பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் இந்த குற்றச்சாட்டு சர்வதேச நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்நிலையில் இக்குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில், சீனாவைச் சேர்ந்த வைராலஜி விஞ்ஞானி லீ மெங் யான் இந்தியா டுடே ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதாவது சீனாவில் இருந்து வெளியேறி வேறொரு நாட்டில் தஞ்சம் அடைந்து வாழ்ந்து வரும் லீ மெங் யான் கூறியிருப்பதாவது : பயோ ஆயுதங்களுக்கு மாற்றாக கொரோனா வைரஸை ஒரு பேராயுதமாக பயன்படுத்துவதற்கான திட்டம் சீனாவில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. சீனாவின் திட்டம் தற்போது அமெரிக்கா வெளியிட்டுள்ள ஆவணங்களின் மூலம் உறுதியாகியுள்ளது என பகீர் கிளப்பியுள்ள அவர், ஒட்டு மொத்த உலகத்திற்கும் பேரழிவை ஏற்படுத்த வேண்டும் என்பது சீனாவின் நீண்டகால திட்டம், பல ஆண்டுகளாக அதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே நான் கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட ஆவணங்கள் மற்றும் தற்போது அமெரிக்க வெளியுறவு துறை வெளியிட்டுள்ள ஆவணங்கள் இரண்டிலுமே மரபுசாரா வழியில் உயிரி ஆயுதத்தை சீனா எப்படி பயன்படுத்துகிறது என்பது பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வைரஸை உருவாக்க சீனா பெரும் தொகையை முதலீடு செய்துள்ளது. சீன மக்கள் ராணுவப்படை ஆய்வகத்தின் மூலம் இந்த வைரஸ் பரவ விடப்பட்டுள்ளது. என்பதை கடந்த ஜனவரி மாதம் நான் யூடியுப் மூலம் தெரிவித்தேன், இந்த வைரஸ் உருவாக்கப்பட்டதன் நோக்கம், ஒட்டுமொத்த சர்வதேச நாடுகளில் மருத்துவ கட்டமைப்பை சீர்குலைக்க வேண்டும், அதனால் அந்நாட்டின் பொருளாதாரம் சீர்குலைக்க வேண்டும் என்பதுதான். மனிதர்களைத் தாக்கும் வைரஸ் செயற்கையாக உருவாக்க வேண்டும் என்ற தனது நீண்டநாள் திட்டதில் தற்போது சீனா வெற்றி பெற்றுள்ளது. இதை ஆரம்பத்தில் வுஹான் நகரத்தில் அது சோதித்து பார்த்தது அதே நேரத்தில் அதில் இருந்து எப்படி காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பது சீனாவுக்கு தெரியும். இந்த பயோ ஆயுதம் அதிகம் பேரை உயிரிழக்க செய்யாது, ஆனால் வுஹானில் பயன்படுத்தப்பட்டபோது அது கடுமையான பாதிக்கப்பட்டது. அதை அனைவரும் கண் கூட பார்த்தோம்.
ஆரம்பத்தில் தடுமாறுவது போல் நடித்து பின்னர் அதிரடியாக அந்த நகரத்தை சீனா மீட்டது. ஆனால் இப்போது அது பிற நாடுகளில் மிகவேகமாக பரவி கொடூரமாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது, அதை இப்போது சீனா வேடிக்கை பார்க்கிறது. அதேபோல இந்த வைரஸை பரப்புவதற்கு முன்பாகவே சீனா, சர்வதேச அரங்கில் இதற்கான கேள்விகள் எழும்போது அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும், அதற்கு என்ன பதில் கூற வேண்டும் என அனைத்தையும் முன்தயாரிப்புடன் கையாண்டு வருவதாக கூறியுள்ளார். அதேபோல் செயற்கையான இந்த வைரஸை, ஆனால் அது இயற்கையானது என்பது போன்ற பிம்பத்தை சீனா அந்நாட்டு ஊடகங்கள் மூலம் உருவாக்கியுள்ளது.
2015ஆம் ஆண்டில் சீன விஞ்ஞானிகள் மற்றும் மக்கள் விடுதலைப்படை ராணுவ கமாண்டர்கள் கொரோனா வைரஸ் உருவாக்கம் தொடர்பாக பேசிய பேச்சுக்களும் 2021 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் உலகம் முழுக்க தாக்க ஆரம்பித்ததற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா.? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள லீ மெங் யான், இதற்கான அறிக்கை இராணுவத்தின் மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது. ராணுவ மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இதைப் பயின்றுள்ளனர், பயோ ஆயுதம் பற்றி அவர்கள் படித்து வந்தனர், இப்போது இதற்கு ஆதாரம் நமக்கு கிடைத்துள்ளது, கடந்த காலங்களில் நிறைய ஆய்வகங்களை சீனாவும் வாங்க ஆரம்பித்தது அங்கு வைரஸ் தொடர்பான ஆய்வுகள் அதிகமாக நடந்துள்ளன, கடந்த சில ஆண்டுகளாக இது தொடர்பான நல்ல நிபுணத்துவம் பெற்றுள்ளனர் என்பதற்கு கொரோனாவே சான்று. இவ்வாறு தெரிவித்துள்ளார்.