இந்தியாவில் இருந்து வந்தால் 5 ஆண்டுகள் சிறை... தடை விதித்த முக்கிய நாடு..!

By Thiraviaraj RM  |  First Published May 1, 2021, 10:45 AM IST

 நம் நாட்டை இயல்பு நிலைக்கு மீட்டுக் கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டினாலும், பல நாடுகள் நம் நாட்டுடனான விமான சேவையை தற்காலிகமாக துண்டித்துள்ளன. அந்த வகையில், ஆஸ்திரேலியாவும் இந்தியாவுக்கு நேரடி விமான சேவையை ரத்து செய்தது.


நம் நாட்டை இயல்பு நிலைக்கு மீட்டுக் கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டினாலும், பல நாடுகள் நம் நாட்டுடனான விமான சேவையை தற்காலிகமாக துண்டித்துள்ளன. அந்த வகையில், ஆஸ்திரேலியாவும் இந்தியாவுக்கு நேரடி விமான சேவையை ரத்து செய்தது.

Tap to resize

Latest Videos

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,523 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  புதிதாக 4,01,993 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,91,64,969 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக 3,523 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,11,853 ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,99,988 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,56,84,406 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 32,68,710 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் சதவிகிதம் 81.84% ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் சதவிகிதம் 1.11% ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் சிகிச்சை வெறுவோர் சதவிகிதம் 17.06% ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம், நாட்டின் இதுவரை 15,49,89,635 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு நேரடி விமான சேவையை ரத்து செய்துவிட்டது. இருப்பினும் இந்தியாவிலிருந்து நேரடியாக வராமல், வேறு நாடுகளின் வழி பலரும் ஆஸ்திரேலியாவுக்கு வருவது தெரியவந்துள்ளதால் அந்நாட்டு அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

 

இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியர்களை ஆஸ்திரேளியாவுக்கு திரும்ப அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. தடையை மீறி வருபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறையும் 66 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்படுமென எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் 3ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருவதாகவும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
 

click me!