குட் நியூஸ்... கொரோனாவை விரட்ட ரஷ்யாவின் தடுப்பூசி ரெடி... மே 1ம் தேதி இந்தியாவுக்கு வருகிறது..!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 27, 2021, 5:08 PM IST
Highlights

ரஷ்ய தடுப்பு மருந்திற்கு கடந்த ஏப்ரல் 12ம் தேதி மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கிய நிலையில், மே 1ம் தேதி தடுப்பூசி மருந்துகள் இந்தியா வந்தடையும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, வரும் மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

ஏற்கனவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட்ஷூல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. மக்களும் முன்பை விட தற்போது தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுவதால் தடுப்பூசி மருந்திற்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே இந்தியாவிற்கு 3வது தடுப்பூசி தேவை என்பதால் ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்தான ஸ்புட்னிக் - வி தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி அளித்துள்ளது. ஸ்புட்னிக் - வி தடுப்பூசியை பயன்படுத்துவதன் மூலம் 90 சதவீதம் பயன்பெற முடியும் என ரஷ்ய நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

ரஷ்ய தடுப்பு மருந்திற்கு கடந்த ஏப்ரல் 12ம் தேதி மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கிய நிலையில், மே 1ம் தேதி தடுப்பூசி மருந்துகள் இந்தியா வந்தடையும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியம் இந்தியாவுக்கு ஆண்டுதோறும் 850 மில்லியன் டோஸ் ஸ்புட்னிக் தடுப்பு மருந்தை அனுப்ப ஏற்கனவே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 5 நிறுவனங்கள் இந்த மருந்தைப் பெற்று இந்தியா முழுவதும் விநியோகிக்கவுள்ளன.முதல் கட்டமாக எத்தனை டோஸ் மருந்துகளை அனுப்பவது என்பது குறித்து உறுதியாகவில்லை என்றும், ஆனால் மே 1ம் தேதி முதல் தடுப்பு மருந்துகளை அனுப்பும்  பணி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!