சீனாவை விட்டு மொத்தமா வெளியேறும் வெளிநாட்டு நிறுவனங்கள்..! விழி பிதுங்கிப்போய் நிற்கும் சீனா

By karthikeyan VFirst Published Apr 17, 2021, 10:40 PM IST
Highlights

கொரோனா பெருந்தொற்று, அதிகமான வரி, வர்த்தகப்போர் ஆகியவற்றின் விளைவாக வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுகின்றன. அதைத் தடுப்பதும், நிறுவனங்கள் வெளியேறுவதால் ஏற்படும் பொருளாதார இழப்பை ஈடுகட்டுவதும் சீனாவிற்கு பெரும் சவாலாக உள்ளது.
 

சீனாவில் அமைக்கப்பட்டிருக்கும் உற்பத்தி ஆலைகளை மூடிவிட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுவது குறித்தும் அதன்விளைவாக சீனா எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், சீனா பாஸ் நியூஸின் எடிட்டர் ஷெனான் பிராண்டாவ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இதோ..

சீனாவிலிருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறுவருகின்றன. வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவிலிருந்து கொத்து கொத்தாக வேகமாக வெளியேறிவருகின்றன. கொரோனா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பிலிருந்து மீண்டெழ முடியாத அளவிற்கு நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுகின்றன. 

உற்பத்தி மையமாக விளங்கும் சீனா, உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு வெளிநாடுகளை சார்ந்திருக்கும் சீனா, அதை தவிர்க்க, உள்நாட்டு சந்தையை வலுப்படுத்த முனைகிறது. ஆனால் வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுவது, சீன அரசுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

சீனாவின் ஷாங்காய் நகரில் அமைந்திருக்கும் அமெரிக்க வணிக சேம்பர் கடந்த ஆண்டு(2020) நவம்பரில், வருடாந்திர சீன பிசினஸ் ரிப்போர்ட்டில், அதன் 346 உறுப்பினர்களிடம் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகளை வெளியிட்டது. அதன்படி, 71% உற்பத்தி நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறும் திட்டமில்லை என்று தெரிவித்ததாக அந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

2021ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி, பெய்ஜிங்கை மையமாக கொண்டு இயங்கும் ஆன்லைன் பிசினஸ் நியூஸ் இதழான கைக்ஸின் என்ற இதழில் முன்னணி சீன பிசினஸ் ஆலோசகர்கள் எழுதிய கட்டுரையில், சீனாவிலிருந்து வெளியேறும் மனநிலையில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் பிரின்ஸ் கோஷ் கடந்த ஆண்டு செப்டம்பரில் எழுதிய கட்டுரையில், அதிக வரிகள், கொரோனா பெருந்தொற்று, புவிசார் அரசியலில் சீனாவில் நிலவும் பதற்றம் ஆகியவற்றின் விளைவாக சீனாவில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவை விட்டு மொத்தமாக வெளியேறும் அபாயம் இருப்பதையும், அதனால் உலகளவில் உற்பத்தி மையமாக திகழும் சீனா அடி வாங்கப்போவதாகவும் எச்சரித்திருந்தார்.

ஹாங்காங்கை சேர்ந்த விருது வென்ற பத்திரிகையாளரான ஜோஹன் நைலாண்டர், கண்டிப்பாக சீனாவிலிருந்து வெளிநாட்டு உற்பத்தி நிறுவனங்கள் வெளியேறும். அது ஒரே இரவில் நடக்காது. ஆனால் கண்டிப்பாக நடந்தே தீரும் என்று எழுதியிருந்தார்.

சீனாவிலிருந்து வெளிநாடு நிறுவனங்கள் வெளியேறுவது தொடர்பான விவகாரத்தில், ஆம் என்றும் இல்லை என்றும் இருவேறு கருத்துகள் உள்ள நிலையில், யார் சொல்வது சரி, யார் சொல்வது தவறு என்பதை தெரிந்துகொள்ள ஒரே வழி என்னவென்றால், ஷாங்காயில் உள்ள அமெரிக்க வணிக சேம்பர் நடத்திய சர்வேயில் கருத்து தெரிவித்த நிறுவனங்களிடம் உண்மைத்தன்மையை கேட்டறிவதுதான். 

அந்தவகையில், அமெரிக்க வணிக சேம்பரில் உறுப்பினர்களாக உள்ள 346 நிறுவனங்களில் 200 நிறுவனங்கள் மட்டுமே சீனாவை விட்டு வெளியேறுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளன. அந்த 200ல் 141 நிறுவனங்கள்(71%) சீனாவைவிட்டு வெளியேறும் திட்டமில்லை என்றும், 58 நிறுவனங்கள்(29%) சீனாவைவிட்டு வெளியேறுவதாக தெரிவித்தன.

சர்வே எடுக்கப்பட்ட அமெரிக்க வணிக சேம்பரின் 200 நிறுவங்களில் பெரும்பாலானவை அமெரிக்கா சார்புடைய சீன ஆதரவு உற்பத்தி நிறுவனங்கள்.  2020ம் ஆண்டுக்கான சீன புள்ளியியல் ஆண்டு புத்தகத்தில், சீனாவின் தேசிய புள்ளியியல் பியூரோ வெளியிட்ட ரிப்போர்ட்டில் சீனாவில் 3,00,000 உற்பத்தி நிறுவனங்கள் உள்ளதாகவும், வெளிநாட்டு நிறுவனங்களை நாடு வாரியாக பிரிக்க விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தது. ஆனால் சீன வணிகத்துறை 2018 ஜனவரி - மே மாதத்தில் வெளியிட்ட ரிப்போர்ட்டில் வெளிநாட்டு நிறுவனங்களை நாடு வாரியாக வகைப்படுத்தியது. அதன்படி, சீனாவில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் 95.2%, ஹாங்காங், சிங்கப்பூர், தைவான், தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளை சேர்ந்தவை. 

சீனாவில் தொழிற்கூடங்களை அமைத்துள்ள நிறுவனங்களில் பெரும்பாலானவை தைவான், தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளை சேர்ந்தவை. அப்படியிருக்கையில், கிட்டத்தட்ட அந்நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் அனைத்தும் வெளியேறுவதை உறுதி செய்துள்ளன.

கடந்த ஜனவரியில் Financial Timesல் வெளிவந்த கட்டுரையில், அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக பதற்றம் மற்றும் விலை உயர்வு, வரி உயர்வு ஆகியவற்றின் விளைவாக ஆயிரக்கணக்கான தைவான் நிறுவனங்கள் சீனாவைவிட்டு வெளியேறுகின்றன. 

1992ம் ஆண்டிலிருந்து சீனாவின் ஹுய்ஷு நகரில் இயங்கிவந்த தென்கொரிய ஸ்மார்ட்ஃபோன் நிறுவனமான சாம்சங், அதன் உற்பத்தி ஆலையை 2019ம் ஆண்டு மூடியது. அதன்விளைவாக, அதை சார்ந்திருந்த 60% தொழில்கள் முடிவுக்கு வந்தன. பாகங்கள் உற்பத்தி ஆலைகள், கடைகள், ஹோட்டல்கள் என, சாம்சங் ஆலை மூடப்பட்டதால், 60% தொழில்கள் முடங்கின.

சீன ஊடகங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவைவிட்டு வெளியேறுவதை மறுத்தன. உற்பத்தி மையமாக விளங்கும் சீனா, உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு வெளிநாடுகளை சார்ந்திருக்கும் நிலையில், அதை தவிர்க்க, உள்நாட்டு சந்தையை வலுப்படுத்த "Dual Circulation" என்ற திட்டத்தை 2020ல் அறிமுகப்படுத்தியது. இது ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசின் இந்த முன்னெடுப்பு, டிஃபென்சிவ் அணுகுமுறை. 

வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவில் உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான சூழலை ஷென்ஸென் உள்ளிட்ட பல நகரங்களில் பல்லாண்டுகளாக உருவாக்கியது சீனா. எனவே வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறுவது சீனாவிற்கு பேரிழப்பு. வர்த்தக போர், கொரோனா பெருந்தொற்று ஆகியவற்றின் விளைவாக ஷென்ஸெனில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் 2020ல் வெளியேறின. சீன அதிபர் ஜி ஜின்பிங், அந்த இழப்புகளை ஈடுகட்ட, சுயசார்பு திட்டங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்தல் ஆகிய முயற்சிகளை முன்னெடுத்தார். சீனாவை விட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறுவது அந்நாட்டின் பிரச்னையல்ல; அந்த இழப்பை சீனா எப்படி ஈடுகட்டப்போகிறது என்பதுதான் விஷயம். 
 

click me!