கொரோனா இப்போதைக்கு ஓயாது... இனிமே தான் ஆட்டமே இருக்கு... உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!

By vinoth kumarFirst Published Apr 13, 2021, 1:53 PM IST
Highlights

கொரோனா வைரஸ் தொற்று இன்னும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. அது முடிவுக்குவர நீண்ட காலம் ஆகும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று இன்னும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. அது முடிவுக்குவர நீண்ட காலம் ஆகும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா முதல் அலை ஓய்ந்ததையடுத்து தற்போது கொரோனா 2வது அலை உலகநாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக தலைவர்கள் கடும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும், தகுதி உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் வலியுறுத்தப்படுகின்றனர். 

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று இன்னும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது என்றும் அது முடிவுக்குவர நீண்ட காலம் ஆகலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம்  செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- பல்வேறு நாடுகளில் உள்ள மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. பல நாடுகளில் தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும் மக்களின் அலட்சியம் காரணமாக அது தொடர்ந்து பரவி வருகிறது என்றார். 

இளம் வயதினர் தங்களுக்கு தொற்று வராது என்று நம்புகின்றனர். ஆனால் அது தவறானது. கொரோனா பரவல் குறித்து பல்வேறு குழப்பங்கள், சிகிச்சையில் உள்ள சிக்கல்களால் வைரஸ் முடிவுக்கு வர நீண்டகாலம் ஆகும். பொதுமக்களின் ஒத்துழைப்பு மூலம் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியம் என்பது நமக்கு தெரியவந்துள்ள உண்மை என்றார்.

click me!