அப்படியாக இதுவரை 10லட்சம் மெட்ரிக் டன் நீர் அந்த வளாகத்தில் உள்ளது. என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நின்ற ஜப்பான், இப்போது அதை பசிபிக் பெருங்கடலில் கலப்பது என்று முடிவெடுத்துள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு புகுஷிமா உலையில் ஏற்பட்ட விபத்தின் போதும் அதன் பிறகும் அதன் வெப்பத்தையும், கதிர்வீச்சையும் குறைப்பதற்காக லட்சகணக்கான டன் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது. அதில் குறைவான கதீர்வீச்சு கொண்ட நீர் பசிபிக் பெருங்கடலுக்குள் சென்றது. அதிக கதீர்வீச்சு கொண்ட தண்ணீர் அணுவுலை வளாகத்திலேயே தொட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டது.
அப்படியாக இதுவரை 10லட்சம் மெட்ரிக் டன் நீர் அந்த வளாகத்தில் உள்ளது. என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நின்ற ஜப்பான், இப்போது அதை பசிபிக் பெருங்கடலில் கலப்பது என்று முடிவெடுத்துள்ளது. சேமித்து வைக்கப்பட்டுள்ள நீரில் உள்ள அதிகளவு கதிர்வீச்சு அகற்றப்பட்ட பிறகே கடலுக்குள் செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால் அதில் டிட்ரியத்தை முழுமையாக அகற்றுதற்கான தொழில்நுட்பம் உலகத்தில் எந்த நாட்டிடமும் இல்லை.
ஜப்பானின் இந்த முடிவிற்கு உலக நாடுகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன.உடனடியாக இதை செய்யப்போவதில்லை என்றும், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாகும் எனவும் ஜப்பானிய அரசு அறிவித்திருந்தாலும், இந்த அறிவிப்பு கடலோர நாடுகளை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. ஏற்கனவே “பசிபிக் பெருங்கடல் செத்துவிட்டது, நாங்கள் பார்த்த சார்டைன்கள், ஒங்கில்களை பாரக்கமுடியவில்லை” என பயணம் போக்க்கூடிய மாலுமிகள் சொல்லிவருகின்றனர். இந்த நிலையில் ஜப்பானிய அரசின் இந்த அறிவிப்பு உலக நாடுகளை கவலை கொள்ள செய்துள்ளது. அணு சக்தியும் மானுடமும் ஒன்றாக வாழமுடியாது என்கிற கூற்று மீண்டும் உண்மையாகியுள்ளது.