உங்களுக்கு இதய பிரச்சனை இருக்கிறதா..!! அமெரிக்க ஆராய்ச்சி கட்டுரையில் வெளியான அதிர்ச்சி..!!

By Ezhilarasan Babu  |  First Published Apr 14, 2020, 12:10 PM IST

கொரோனா வைரசால்  பாதித்த நோயாளிகளுக்கு நுரையீரல் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்பது ஆராய்ச்சிகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் , இதய நோய்க்கு ஆளானவர்களையும் அது கடுமையாக பாதிக்கிறது என்பது தற்போது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.


கொரோனா வைரசால்  பாதித்த நோயாளிகளுக்கு நுரையீரல் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்பது ஆராய்ச்சிகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் , இதய நோய்க்கு ஆளானவர்களையும் அது கடுமையாக பாதிக்கிறது என்பது தற்போது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.  மற்ற நோயால் பாதித்தவர்களை காட்டிலும் இதய பிரச்சனைக்கு உள்ளானவர்களை கொரோனா நான்கு மடங்கு அதிகமான தாக்குகிறது  என்பதும்  கண்டறிப்பட்டுள்ளது . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.   இதுவரையில் இந்த வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்தை எட்டியுள்ளது ,  சுமார் 19 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது , இந்நிலையில்  இந்த வைரஸ் தாக்கினால்  அது உடலை எந்தெந்த வகையில்  பாதிக்கிறது அது உடலில் ஏற்படுத்தும் தாக்கம்  என்ன என்பது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது . 

Latest Videos

இந்த வைரஸ் சுவாசப்பாதை வழியாக ஊடுறுவி  நுரையீரலிலுள்ள காற்றுப் பைகளை அடைத்து  மரணத்தை ஏற்படுத்துகிறது என்பதை முன்கூட்டியே  மருத்துவர்கள் அறிந்துள்ளனர் .  இந்நிலையில் அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி கூட்டமைப்பின் சார்பில் அதிர்ச்சி தரக்கூடிய கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது ,அதாவது  நுரையீரலைப் போல இதயத்தையும் கொரோனா வைரஸ் கடுமையாக தாக்குகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .  இது குறித்து தெரிவித்துள்ள அந்த கட்டுரை...  சீனாவின் வுஹானில் உள்ள மருத்துவ மனையில்  கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நபருக்கு திடீரென கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது.  பின்னர் அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில்  அந்த  நபருக்கு இதய தசைகளில் கடுமையான காயம் ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது . பின்னர் அவரது histry யை பார்த்ததில்  அவருக்கு லேசான இதய நோய் பிரச்சனை இருந்ததும் பின்னர்  கொரோனா வைரஸ் காரணமாக அது  அவருக்கு  அதிகமாகி , கடுமையாக இதய பிரச்சனையை ஏற்படுத்தியதையும்  மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது .  

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களை மட்டுமன்றி இதய நோய் பாதிப்பு இல்லாதவர்களின் இதயத்தையும்  கொரோனா  வைரஸ் கடுமையாக தாக்குகிறது  அல்லது காயத்தை ஏற்படுத்துகிறது என அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் கட்டுரை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட இந்த பிரச்சனைகளுக்கு (இதய பிரச்சனை) உட்பட்ட நபர்கள் மற்ற நபர்களை காட்டிலும்  கொரோனா வைரஸ் தொற்றின் போது அதிக ஆபத்து நிலைக்கு செல்வதையும்  மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இது குறித்து நடைபெற்று வரும் மற்ற சில ஆராய்ச்சிகளும் இதே தகவலை தெரிவிக்கிறது  என அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது  இதயப்பிரச்சனை உள்ளவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கொரோன வைரஸ் இதயப் பகுதியை கடுமையாக தாக்குகிறது , ஆனால் ஏற்கனவே இதய பிரச்சனை உள்ளவர்களை அது மிக கடுமையாக தாக்குகிறது , அவர்களை மரணம் வரைகூட அது இட்டுச் செல்கிறது என்பது தங்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

 

அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் நடத்திய மற்றொரு ஆய்வில்,  இத்தாலி நாட்டைச் சேர்ந்த, நல்ல திடகாத்திரமான ( 53) வயது பெண் மணி ஒருவர்  திடீர்  மாரடைப்பு காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்  என்றும் ,  அப்போது அவரது இதய தமனிகளை மருத்துவர்கள் பரிசோதித்தபோது இதய தசைகள் மோசமாக சேதமடைந்திருந்தது,   ஆனால் இதயவால்வுகளில் எந்த  அடைப்பும் இல்லை  என்பது பரிசோதனையில் தெரிந்தது ,  இதில் குழப்பமடைந்த மருத்துவர்கள் அவரது ரத்த மாதிரிகளை பரிசோதித்ததில்  அவருக்கு கொரோனா வைரஸ் தோற்று இருப்பது தெரியவந்தது.  ஆகவே கொரோனா வைரஸ் தாக்கியதால் அவரது இதயபகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது  என்பது  மருத்துவ பரிசோதனைகள்  மூலம்  தெரியவந்தது  . பரிசோதனைக்குப் பின்னரே கொரோனா தொற்று இருப்பது  அந்த பெண்ணுக்கு தெரிய வந்தது,  அதுவரையில் அவருக்கு எந்தவிதமான சுவாச பிரச்சனைகளோ அல்லது அதற்கான அறிகுறிகளோ தென்படவில்லை என அந்த பெண் தெரிவித்துள்ளார்.  எனவே கொரோனா வைரஸ் நுரையீரலை தாக்குவதற்கு இணையாக மனித இதயத்தை அது கடுமையாக தாக்குகிறது அல்லது காயப்படுத்துகிறது என்பது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது குறிப்பிடதக்கது.  
 

click me!