இந்துக்களை கதற விடும் பாகிஸ்தான்... உணவு, நிவாரணம் மறுக்கப்படுவதாக பகீர் குற்றச்சாட்டு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Apr 14, 2020, 11:34 AM IST
இந்துக்களை கதற விடும் பாகிஸ்தான்... உணவு, நிவாரணம் மறுக்கப்படுவதாக பகீர் குற்றச்சாட்டு...!

சுருக்கம்

பாகிஸ்தானின் சிறுபான்மை மக்களான இந்துக்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் உணவு மற்றும் நிவாரண உதவிகள் மறுக்கப்படுவதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க அமைப்பு குற்றச்சாட்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 57 ஆயிரத்து 547 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 25ஆயிரத்து 384 ஆக உள்ளது. கொரோனா தொற்றால் இதுவரை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. இந்த கொடிய வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் அனைத்தும் முயன்று வருகின்றன.

இதையும் படிங்க: வெறியாட்டம் ஆடும் கொரோனா... மகனை நினைத்து பரிதவிக்கும் தளபதி விஜய்...!

பாகிஸ்தானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 707 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 96 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த அரசு மேகொள்ளும் நடவடிக்கைகளுக்கு நட்பு நாடான சீன உதவிக்கரம் நீட்டி வருகிறது. முகக்கவசம், பாதுகாப்பு உடைகள் ஆகியவற்றை பாகிஸ்தான் சீனாவிற்கு கொடுத்து உதவி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தாக்கத்தால் அச்சத்தில் உறைந்துள்ள நிலையில், பாகிஸ்தானின் கோர முகம் குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

பாகிஸ்தானின் சிறுபான்மை மக்களான இந்துக்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் உணவு மற்றும் நிவாரண உதவிகள் மறுக்கப்படுவதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க அமைப்பு குற்றச்சாட்டியுள்ளது. பாகிஸ்தானின் இந்த செயலை கடுமையாக கண்டித்துள்ள அந்த அமைப்பு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்து மற்றும் கிறிஸ்துவர்கள் வசிக்கும் பகுதிகளில் உணவு மற்றும் நிவாரண உதவிகள் மறுக்கப்படுவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளது .

இதையும் படிங்க: சன்னி லியோனுக்கே டப் கொடுக்கும் பிரபல நடிகை... ஓவர் கிளாமர் போட்டோஸை பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்...!

கொரோனாவால் பாதிக்கப்படும் சிறுபான்மையின மக்கள் உணவின்றியும், குடும்ப உறுப்பினர்களை பாதுகாக்க வழி தெரியாமலும் திண்டாடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக கராச்சி பகுதியில் ஊரடங்கால் முடங்கியுள்ள சிறுபான்மையின மக்கள் உணவின்றி கஷ்டப்படுவதாகவும், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் உதவிகளை சிறுபான்மையினருக்கு சென்று சேராமல் தடுக்கப்படுவதாகவும் யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் சிறுபான்மையினருக்கும் சமமான உதவிகளை பகிர்ந்தளிக்கும் படி பாகிஸ்தானிடம் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!
என் புருஷன் என்னை ஏமாத்திட்டாரு.. பிரதமர் மோடியிடம் பாகிஸ்தான் பெண் உருக்கமான கோரிக்கை!