கொரோனா வைரஸ் சீனாவின் பயோ வெப்பன்... அமெரிக்கா திடுக் புகார்... அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு!

By Asianet TamilFirst Published Mar 25, 2020, 9:16 PM IST
Highlights

சீனாவின் வூஹானிலிருந்துதான் இந்த கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அந்த ஊரில் சீனாவின் மிகப் பெரிய வைரலாஜி ஆய்வு மையம் உள்ளது. இந்த மையத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்கா சந்தேகப்படத் தொடங்கியுள்ளது. 

'கொரோனா' என்பது சீனாவின் உயிரி ஆயுதம் (பயோ வெப்பன்) என்றும் அதைத் திட்டமிட்டுப் பரப்பிய சீனா, 20 டிரில்லியன் டாலர்களை நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்றும் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சீனாவின் வூகான் மாகாணத்திலிருந்து கிளம்பிய கொரோனா பூதம், இன்று உலகையே அச்சுறுத்திவருகிறது. இன்றைய நிலவரப்படி உலகில் 192 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தற்போதுவரை 4.40 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19,753 பேர் உயிரிழந்துள்ளார்கள். ஒவ்வொரு நாட்டிலும் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்தவண்ணம் உள்ளது. உலகையே இந்த வைரஸ் அச்சுறுத்திவருவதால், ஒவ்வொரு நாடும் அலறிவருகின்றன. இந்த வைரஸால் வல்லரசான அமெரிக்காவும் பீதியில் உறைந்துள்ளது. அந்நாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 784 பேர் உயிரிழந்துள்ளனர். 
இந்நிலையில் கொரோனா வைரஸை பரப்பியதற்காக சீனாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அங்குள்ள டெக்சாஸ் மாகாண நீதிமன்றத்தில் வாஷிங்டனைச் சேர்ந்த ப்ரீடம் வாட்ச் வழக்கறிஞர்கள் குழுவோடு இணைந்து அமெரிக்க செனட்டர் லேரி கிளேமேனும் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

 
அந்த மனுவில், “கொரோனா வைரஸ் ஓர் உயிரி ஆயுதம் (பயோலாஜிக்கல் வெப்பன்) ஒரு மனிதரிடமிருந்து இன்னொரு மனிதருக்கு எளிதாக தொற்றும்படி அதை சீனா வடிவமைத்துள்ளது. அந்த வைரசால், உலகில் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19,000 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் மிகுந்த ஆபத்தானது. உலகின் பொதுச்சட்டத்தை மீறி சீனா இந்த வைரஸை உருவாக்கி பரப்பியுள்ளது. எனவே அமெரிக்காவுக்கு 20 டிரில்லியன் டாலர்களை சீனா நஷ்ட ஈடாக தர வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
சீனாவின் வூஹானிலிருந்துதான் இந்த கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அந்த ஊரில் சீனாவின் மிகப் பெரிய வைரலாஜி ஆய்வு மையம் உள்ளது. இந்த மையத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்கா சந்தேகப்படத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே அமெரிக்க ராணுவ வீரர்கள்தான் வூஹானில் கொரோனா வைரஸை பரப்பினர் என சீனாவும் குற்றம் சாட்டியிருந்தது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவும் அமெரிக்காவும் பரஸ்பரம் குற்றம்சாட்டிவரும் நிலையில், இந்த வழக்கு உலக அளவில் பரபரப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.

click me!