அமெரிக்காவில் வேகமெடுத்த கொரோனா..!! முடங்கியது நியுஜெர்சி... மருந்துக்காக காத்திருக்கும் மக்கள்..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 18, 2020, 5:44 PM IST
Highlights

இந்நிலையில் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் அதன் பல்வேறு அறிவுறுத்தல்களால் ஏராளமான மக்கள்  வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர் தரையில் நியுஜெர்சியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

அமெரிக்காவில் அனைத்து மாகாணங்களிலும் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது . சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது .  ஜப்பான் ,  தென் கொரியா ,  இத்தாலி ,  பிரான்ஸ் ,  ஈரான் ,  உள்ளிட்ட நாடுகளில் இந்த வைரசின் தாக்கம் அதிகமாக உள்ளது . 

இந்நிலையில் அமெரிக்காவின் இந்நோய் வேகமாக பரவியுள்ளது .  வாஷிங்டன் மாநிலத்தில் பிப்ரவரி 26ஆம் தேதி கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டது அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வேகமாக பரவி விரவி உள்ளது.  இந்நிலையில் அமெரிக்காவில் இந்த வைரஸ் 105 பேர் உயிரிழந்துள்ளனர்.  அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6500 தாண்டியுள்ளது . கிழக்கு கடற்கரை பகுதியில் நியூயார்க் மற்றும் மேற்குப் பகுதியில் வாஷிங்டன் ஆகிய மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது .

 

இந்நிலையில் கொரோனா தீவிரமாக பரப்பும் தொற்று நோய் என உலக சுகாதார அமைப்பு  அறிவித்துள்ளது .  அமெரிக்காவில் சுகாதார நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன .  இந்த வைரசின் தாக்கம் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதம் வரை இருக்கலாம் .  என அமெரிக்க அதிபர் எச்சரித்துள்ளார் . இந்நிலையில் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் அதன் பல்வேறு அறிவுறுத்தல்களால் ஏராளமான மக்கள்  வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர் தரையில் நியுஜெர்சியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

 

click me!