அமெரிக்காவை அடுத்து அதிரடியாக களமிறங்கிய சீனா...!! கொரோனா தடுப்பூசி சோதனையில் அதி தீவிரம்..!!

By Ezhilarasan Babu  |  First Published Mar 18, 2020, 5:07 PM IST

கொரோனா வைரஸின் முறியடிக்கும் திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக மனிதர்கள் மீதான பரிசோதனை தொடங்கியுள்ளது.  
 


கொரோனா வைரஸிற்கு அமெரிக்கா தடுப்பூசி கண்டுபிடித்துள்ள  நிலையில் அமெரிக்காவைத் தொடர்ந்து சீனாவிலும் கொரோனாவுக்கான தடுப்பூசியை பரிசோதிக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது .  மனிதர்கள் மீதான கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனை தொடங்கினாலும் பாதுகாப்பானதுதானா என உறுதிப்படுத்தப்பட்டு அது  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர 12 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை  ஆகும் என தகவல் வெளியாகி உள்ளன .  உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது .  இதுவரை ஒரு லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது .  இந்நிலையில் இத்தாலியில் இந்த வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 16 சதவீதம் அதிகரித்துள்ளது .  இந்த வைரசுக்கு இத்தாலியில் நேற்று ஒரே நாளில் மட்டும் 345 பேர் உயிரிழந்துள்ளனர் . 

Latest Videos

மொத்தத்தில் இத்தாலியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2503 ஆக உயர்ந்துள்ளது . இந்த வைரசுக்கு எதிராக உலகமே போராடி வரும் நிலையில் ,  அமெரிக்காவின் மருந்து கண்டுபிடிப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது . இதுவரை கொரோனாவை முறியடிக்கும் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்து என எதுவும் இல்லை .  இதனால் அமெரிக்காவின் தேசிய சுகாதார ஆராய்ச்சி  நிறுவனமும் ,  மசாசூசெட்ஸ் மாநிலத்தில் செயல்படும் கேம்பிரிட்ஜில் மாடெர்னா என்ற உயிரி தொழில்நுட்பமும் இணைந்து இந்த வைரஸ் தடுப்பு மருந்து ஒன்றை உருவாக்கியுள்ளனர் .  நார்வே நாட்டைச் சேர்ந்த சிஇபிஐ என்ற ஆராய்ச்சி கட்டளையும் இதற்கான நிதி உதவியை வழங்கியுள்ளது.  எம்ஆர்என்ஏ 1273 என குறிப்பிடப்படும் இந்த தடுப்பூசி மருந்தின் சக்தி , கொரோனா வைரஸின் முறியடிக்கும் திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக மனிதர்கள் மீதான பரிசோதனை தொடங்கியுள்ளது.  

பரிசோதனைக்கு தாங்களாகவே முன்வந்துள்ள  18 முதல் 55 வயது நிரம்பிய ஆரோக்கியமா 45 தன்னார்வலர்களை  தேர்வு செய்து ஆறு வாரங்களுக்கு இந்த பரிசோதனை நடத்தப்பட உள்ளது சியாட் நகரில் நடைபெற்று வரும் இந்தப் பரிசோதனையைச் திட்டத்தில் பங்கேற்றவர்களில் முதல் நபர் ஒருவருக்கு கடந்த 16ம் தேதி தடுப்பூசி போடப்பட்டது .  முதற்கட்ட பரிசோதனை சாதனை வேகத்தில் தொடங்கியுள்ளதாகவும் விரைவாக தடுப்புமருந்து நடைமுறைக்கு கொண்டு வருவதே ஆராய்ச்சியின் நோக்கம் என அமெரிக்க சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது . இந்நிலையில் அமெரிக்காவைத் தொடர்ந்து சீனாவிலும் கொரோனா தடுப்பூசி மருந்து  பரிசோதனை செய்ய  அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது .  மனிதர்கள் மீதான கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனை தொடங்கி விட்டாலும் அது பாதுகாப்பானது தானா என உறுதிப்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர  12 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை ஆகும்  எனக் கூறப்படுகிறது .
 

click me!