கொரோனாவில் இருந்து உயிர் தப்பிய 104 வயது மூதாட்டி...!! ஆச்சரியத்தில் திளைக்கும் சீன மருத்துவர்கள்..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 18, 2020, 4:15 PM IST
Highlights

அதாவது கொரோனா வைரஸ் தொற்றினால் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மரணத்திலிருந்து தப்ப முடியாது என்ற பொதுவான கருத்தை ஜாங் குவாங்பென் உடைத்தெரிந்துள்ளார்.  

அறுபது வயதுக்கு மேலானவர்களைத் தாக்கினால்  மரணம் நிச்சயம் என கூறப்பட்டு வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 103 வயது மூதாட்டி அதில் இருந்து மீண்டுள்ளது சீன மருத்துவர்களுக்கு ஆச்சரியத்தையும் திகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது .  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் குறிப்பாக முதியவர்களை தாக்குகிறது என தரவுகள் கூறுகின்றன.  இந்த வைரஸ் 60 வயதுக்கு மேலானவர்களை தாக்கினால் மரணம் ஏற்படுவது உறுதி என இருந்து வருகிறது .  இந்நிலையில் 103 வயது மூதாட்டி  கொரோனாவில் இருந்து உயிர் தப்பியுள்ளார் .  சீனாவில் நவம்பர் கடைசியில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் மக்களை ஆட்டிப்படைக்கிறது .  சீனாவில் வுகான் மாகாணத்திலிருந்து பரவிய அந்த  வைரஸுக்கு . 

இதுவரையில் சீனாவின்  3 ஆயிரத்து 226 பேர் பலியாகி உள்ளனர் சுமார் 80 ஆயிரத்து 881 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .  இதுவரையில் 68 ஆயிரத்து 688 பேர் கொரோனா பாதிப்புகளிலிருந்து  சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.   அவர்களில் ஒருவர்தான் ஜாங் குவாங்பென் என்ற 103 வயது மூதாட்டி லேசான நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்தார், இந்த  மூதாட்டி வுகானில்  உள்ள ஒரு மருத்துவமனையில்  ஆறு நாட்கள் மட்டுமே சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினார் .  வுகானில்  மருத்துவமனையிலிருந்து வெளியிடப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது மூதாட்டி ஜாங் குவாங்பென்னுக்கு  சிகிச்சை அளித்த மருத்துவ குழு அவர் நலமுடன் இருப்பதை உறுதி செய்துள்ளது .  மார்ச் ஒன்றாம் தேதி மூதாட்டி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் ஆபத்தான நிலையில் இருந்தார் . 

மருத்துவர்களிடம் கூட அவரால் தனது நிலையை எடுத்துக் கூற முடியவில்லை ,  ஆனால் ஜாங் குவாங்பென் தற்போது  வைரஸ் காய்ச்சலில் இருந்து மீண்டது சீன மருத்துவர்களிடையே விவாதப்பொருளாக மாறி உள்ளது அதாவது உயர் ரத்த அழுத்தம் , மற்றும் இதய செயலிழப்பு  ஆகியவற்றுடன் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி மீண்டது அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது . அதாவது கொரோனா வைரஸ் தொற்றினால் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மரணத்திலிருந்து தப்ப முடியாது என்ற பொதுவான கருத்தை ஜாங் குவாங்பென் உடைத்தெரிந்துள்ளார்.  அதேபோல் கடந்த வாரம் வயதானவர்களில் பெரும்பாலானோர் வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

click me!