64 ஆயிரம் உயிர்களை காவு வாங்கி கோரத்தாண்டவம்..! கொடூர கொரோனாவால் திணறும் உலக நாடுகள்..!

By Manikandan S R S  |  First Published Apr 5, 2020, 7:26 AM IST

உலகம் முழுவதும் 12,00,319 பேருக்கு கொரோனா பரவி இதுவரை 64,667 பேர் உயிரிழந்துள்ளனர். 8,89,478 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 


உலக நாடுகளை புரட்டி போட்டிருக்கும் கொரோனா வைரஸ் சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய நிலையில் அங்கு 3,326 பேரை காவு வாங்கியது. டிசம்பர் முதல் கொரோனா தாக்குதலால் கடும் பாதிப்படைந்திருக்கும் சீனாவில் தற்போது இயல்பு நிலை மெதுவாக திரும்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் மற்ற நாடுகளில் கொரோனா தனது கொடூர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. இத்தாலி, ஸ்பெயின்,ஈரான், அமெரிக்கா,பிரான்ஸ், இந்தியா என உலகின் 203 நாடுகளில் கொரோனா பரவியுள்ளது.


வல்லரசு நாடான அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. நேற்று ஒரே நாளில் அங்கு 33,072 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக அந்நாட்டில் 3,10,233 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. நேற்று மட்டும் 1,040 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் பலியானோர் எண்ணிக்கை 8,444 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா வைரஸ் உச்சம் அடைந்துள்ளது. அங்கு 1,24,632 பேர் பாதிக்கப்பட்டு 15,362 பேர் பலியாகியுள்ளனர்.

Latest Videos

இந்தியாவில் தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,082 ஆக உயர்ந்து 75 பேர் பலியாகி இருக்கின்றனர். உலகம் முழுவதும் 12,00,319 பேருக்கு கொரோனா பரவி இதுவரை 64,667 பேர் உயிரிழந்துள்ளனர். 8,89,478 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். வைரஸ் பரவிய 2,46,174 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் ஒட்டுமொத்த உலகமும் நிலைகுலைந்து போயுள்ளது.

click me!