கொரோனாவால் பாகிஸ்தானை ஒன்றும் செய்ய முடியவில்லை..!! மார்பை விரித்து காட்டும் இம்ரான் கான்..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 4, 2020, 6:14 PM IST
Highlights

இதுவரை நாடு முழுவதும்  கொரோனாவை கட்டுபடுத்த சுமார் 13,000 கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன , அவை இஸ்லாமாபாத்தில் தேசிய சுகாதார நிறுவனத்தில் உள்ள பொது சுகாதார அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு தரவுகளை சமர்ப்பிக்கும் , 

கடந்த 35 நாட்களில் ஐரோப்பா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுடன்  ஒப்பிட்டு பார்க்கையில்  பாகிஸ்தானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என அந்நாட்டு அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது .  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பாகிஸ்தானில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு அரசு தேசிய செயல் திட்ட அறிக்கை என்ற பெயரில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது .  அதில் ஐரோப்பிய நாடுகளுடனும்,  ஈரானுடனும் ஒப்பிடும்போது பாகிஸ்தானில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு என்று தெரிவித்துள்ளது .  இதுவரை பாகிஸ்தானில் 2700 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.  

மேலும் அந்த அறிக்கையில்  கொரோனா வைரசை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் ,  தேசிய சுகாதார சேவைகள் ,  கொரனா வைரஸை கையாளுவதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் உள்ளிட்டவற்றையும் அறிக்கையில் தெரிவித்துள்ளது .  பாகிஸ்தானில் ஒவ்வொரு நுழைவாயில்களிலும்  மக்களுக்கு  ஸ்கிரீனிங் டெஸ்ட் செய்யப்படுகிறது என்றும் ,  அனைத்து மாகாணங்களும் சுகாதாரப்பணியாளர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது ,  அதேபோல் ஆசாத் -ஜம்மு காஷ்மீர் ,  மற்றும் கில்கிட் ,  பால்டிஸ்தான் ஆகிய அனைத்து மாகாணங்களிலும் சோதனை வசதிகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது .  அதேபோல் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலை கழகத்தால் (NUST) உள்நாட்டில் உருவாக்கப்பட்ட சோதனை கருவிகள் டிராப் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளன .  இந்த சோதனை கருவிகள் அங்கீகரிக்கப்பட்டபின்னர்  பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

 

இதுவரை நாடு முழுவதும்  கொரோனாவை கட்டுபடுத்த சுமார் 13,000 கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன , அவை இஸ்லாமாபாத்தில் தேசிய சுகாதார நிறுவனத்தில் உள்ள பொது சுகாதார அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு தரவுகளை சமர்ப்பிக்கும் , பின்னர் தினசரி நிலவரத்தையும் அறிக்கைகளை சமர்ப்பிக்கவும் தரவுகளை பகுப்பாய்வு செய்து இடர் மதிப்பீடுகளை நடத்துவதற்கும் அவசரகால செயல்பாட்டு மையம் (EOC)பொறுப்பேற்றுள்ளது என அறிக்கையில் பாகிஸ்தான் சுட்டிக்காட்டியுள்ளது.  அதேபோல் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிகளும் கொரோனா வைரஸ்  தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட உள்ளது என்றும் அந்த அறிக்கையில் பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது.   அதேபோல் கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு அவசர நிதியையும் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது ,  இந்நிலையில் நாடு முழுவதும் 154 மாவட்டங்களில் வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது நோயாளிகளை தனிமைப்படுத்தி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் அந்த அறிக்கையில் விவரமாக தெரிவித்துள்ளது.  

 

 

click me!