உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்திருக்கிறது. இதனால் உலக நாடுகள் கடும் பீதியில் உறைந்துள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் ஒட்டுமொத்த உலகமும் நிலைகுலைந்து போயுள்ளது.
உலக நாடுகளை புரட்டி போட்டிருக்கும் கொரோனா வைரஸ் சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய நிலையில் அங்கு 3,270 பேரை காவு வாங்கியது. டிசம்பர் முதல் கொரோனா தாக்குதலால் கடும் பாதிப்படைந்திருக்கும் சீனாவில் தற்போது இயல்பு நிலை மெதுவாக திரும்பிக் கொண்டிருக்கிறது. நேற்றைய நிலவரப்படி அங்கு 9 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர். ஆனால் மற்ற நாடுகளில் கொரோனா தனது கொடூர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது.
சீனாவை காட்டிலும் இத்தாலியில் கொரோனாவிற்கு 6 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். ஈரானில் 1,812 பேரும், ஸ்பெயினில் 2,182, பேரும் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் 3,48,090 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 433 ஆக உயர்ந்துள்ள நிலையில் 9 பேர் பலியாகி இருக்கின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்திருக்கிறது. இதனால் உலக நாடுகள் கடும் பீதியில் உறைந்துள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் ஒட்டுமொத்த உலகமும் நிலைகுலைந்து போயுள்ளது. பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் பொருளாதாரமும் கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதன்காரணமாக மக்கள் பெருத்த அச்சத்தில் இருந்து வருகின்றனர்.