10 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி..! உச்சகட்ட பதற்றத்தில் உலக நாடுகள்..!

Published : Mar 20, 2020, 10:36 AM ISTUpdated : Mar 20, 2020, 10:42 AM IST
10 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி..! உச்சகட்ட பதற்றத்தில் உலக நாடுகள்..!

சுருக்கம்

தற்போது சீனாவை காட்டிலும் இத்தாலியில் கொரோனா பலி அதிகரித்துள்ளது. அந்நாட்டில் 2,978 லிருந்து 3,405 கொரோனா பலி உயர்ந்திருக்கிறது. மேலும் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தை எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் அங்கு 427 பேர் பலியாகி உள்ளனர்.

சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பாதித்துள்ளது.  அங்கு 3,245 பேர் கொரோனா பாதிப்பால் பலியாகி இருகின்றனர்.  சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. தற்போது சீனாவை காட்டிலும் இத்தாலியில் கொரோனா பலி அதிகரித்துள்ளது. அந்நாட்டில் 2,978 லிருந்து 3,405 கொரோனா பலி உயர்ந்திருக்கிறது. மேலும் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தை எட்டியுள்ளது.  நேற்று ஒரே நாளில் அங்கு 427 பேர் பலியாகி உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையில் இருந்து அத்துமீறி வெளியேறினால் 3 மாதம் சிறை தண்டனை அல்லது 18 ஆயிரம் அபராதம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இத்தாலியில் கொரோனா பலி அதிகரித்ததை அடுத்து மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இத்தாலி, சீனாவிற்கு அடுத்தபடியாக ஈரானில் 1,284 பேர், ஸ்பெயினில் 831 பேர் பலியாகி இருக்கின்றனர். உலகம் முழுவதிலும் கொரோனா பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் உலக நாடுகள் கடும் பீதியில் உறைந்துள்ளன.  இந்தியாவிலும் கொரானாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரையிலும் 195 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கின்றனர். 163 இந்தியர்களும் 32 வெளிநாட்டினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

அடக்கமுடியாத கோபமும் ஆத்திரமும் வருது..! மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த சீமான்..!

நேற்று பஞ்சாபில் ஒருவர் கொரோனாவிற்கு பலியான நிலையில் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களையும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு எச்சரித்துள்ளது. வரும் ஞாயிறு அன்று ஒட்டுமொத்த தேசத்திலும் ஊரடங்கு அமல்படுத்த பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அன்றைய தினம் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளிவர வேண்டாம் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?