கொரோனாவை போட்டுத்தள்ளிய சீனா... வுகானில் ஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என அறிவிப்பு..!!

By Ezhilarasan Babu  |  First Published Mar 19, 2020, 1:34 PM IST

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் நாளொன்றுக்கு குறைந்தது 10 பேரையாவது தாக்கி வந்த நிலையில் சீனாவில் இந்த வைரஸ் யாரையும் புதிதாக தாக்கவில்லை .
 


கடந்த மூன்று மாதங்களாக கொரோனா வைரஸ் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் பத்து பேரையாவது தாக்கி வந்த நிலையில் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா தாக்கம் ஏற்படவில்லை என்பதை சீனா தேசிய சுகாதார ஆணையம் பெருமையாக தெரிவித்துள்ளது .  சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் சுமார் 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது.  இந்த கொடிய வைரஸ் ஒட்டுமொத்த சீனாவில் புரட்டிப்போட்டதுடன் கடந்த மூன்று மாதங்களில் சுமார் 3 ஆயிரத்து 245 பேரை பலி வாங்கியுள்ளது .  இந்நிலையில் சீனாவில் கொரோனா நோய்களின் தாக்கத்தையும் உயிரிழப்பையும் கட்டுப்படுத்த சீனா சுகாதாரத்துறை போராடி வந்த நிலையில் தற்போது மூன்று மாதம் கழித்து அந்த வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளது . 

Latest Videos

தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்து வந்த நிலையில் ,  சீனாவின் கடுமையான போராட்டத்தின் மூலம் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு  15 க்கும் கீழ் குறைந்தது ,  இதற்கிடையில் கொரோனா தொற்று காரணமாக இத்தாலி ,  ஈரான் ,  ஸ்பெயின் ,  ஆகிய நாடுகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது .  இந் நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது இதுவரையில்  இந்தியாவில் 169 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .  கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் நாளொன்றுக்கு குறைந்தது 10 பேரையாவது தாக்கி வந்த நிலையில் சீனாவில் இந்த வைரஸ் யாரையும் புதிதாக தாக்கவில்லை .

அதாவது யாருக்கும் புதிதாக வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது .  இதுகுறித்து வெளியிட்டுள்ள சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் தினசரி அறிக்கையில்,   நேற்று சீனாவில் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்புகள் எதுவும் உள்நாட்டில் பதிவாகவில்லை ,  ஆனால்  புதன்கிழமை சீனாவில் மொத்தம் 34 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன இவை அனைத்தும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களிடம் இருந்து வந்தவை என குறிப்பிடப்பட்டுள்ளது . ஹுபெய் மாகாணத்திலுள்ள 25க்கும் மேற்பட்ட நகரங்களில் கொரோனா பரவல்  முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது .  எனவும் மொத்தத்தில் வுஹான் நகரில் கொரோனா தொற்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது எனவும் சீனா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது .
 

click me!