கொரோனா வைரசின் மூலம் என கண்டறியப்படும் சார்ஸ் மற்றும் சிஓஇ-2 ஆகியவற்றிலிருந்து கொரோனா வைரஸ் தோன்றியிருக்கலாம் என கூறப்படுகிறது .
கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டது அல்ல இயற்கையானதுதான் என்றும் இது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரஸ் அல்ல எனவும் அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கொரோனா ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட உயிரியல் ஆயுதம் என அமெரிக்காவும் சீனாவும் மாறிமாறி குற்றம் சாட்டி வந்தன. அதுமட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் கிருமியை பரப்பியது அமெரிக்காதான் என சீனாவும் , சீனாவால் உருவாக்கப்பட்ட வைரஸ் கிருமிதான் கொரோனா எனவும் அமெரிக்கா குற்றம்சாட்டியது . இந்நிலையில் அமெரிக்கா விஞ்சானிகள் ஆய்வில் இது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட கிருமி அல்ல இயற்கையாக உருவானது என தெரியவந்துள்ளது .
சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் சுமார் 120 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது . வேகமாக பரவி வரும் இந்த வைரசால் இதுவரை உலக அளவில் 8, 919 பேர் உயிரிழந்துள்ளனர் . 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . இந்த வைரஸ் சீனாவின் உயிரியல் ஆயுதம் என மற்ற நாடுகள் குற்றம்சாட்டி வந்தன. இது உலக நாடுகளின் மீது சீனா தொடுத்துள்ள பயோ வார் என அமெரிக்கா குற்றம் சாட்டியது. அதுமட்டுமின்றி இந்த வைரஸை வூகான் வைரஸ் என்றும் , சீனா வைரஸ் என்றும் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் விமர்சித்து வந்தார், இது இரு நாட்டுக்கும் இடையே உரசலை ஏற்படுத்தியது . இந்நிலையில் அமெரிக்க விஞ்ஞானிகளின் புதிய ஆய்வுகள் கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது அல்ல என்றும் கொரோனா இயற்கையான வைரஸ் என்றும் கண்டறியப்பட்டுள்ளது .
சீன விஞ்ஞானிகளால் வெளியிடப்பட்ட வைரஸின் மரபணு வரிசை தரவுகளின் அடிப்படையில் , ஸ்கிரிப்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நோய் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரியல் துறையின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை நடத்தினர் . இந்த ஆய்வின் முடிவில் கொரோனா என்பது ஆய்வக கட்டுமானம் அல்லது வேண்டுமென்றே கையாளப்படுவது போன்றவை அல்ல என்று கண்டறியப்பட்டுள்ளது . அதாவது கொரோனா வைரசின் மூலம் என கண்டறியப்படும் சார்ஸ் மற்றும் சிஓஇ-2 ஆகியவற்றிலிருந்து கொரோனா வைரஸ் தோன்றியிருக்கலாம் என கூறப்படுகிறது . சார்ஸ் மற்றும் சிஒஇ-2 வைரஸ்களை ஆராய்ந்ததில் இது இயற்கையான வைரஸ் அமைப்பாக்கும் என்றும் மரபணு பொறியியலின் தயாரிப்பு அல்ல என்றும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.