
இந்நிலையில் மணிப்பூரைச் சேர்ந்த 12 வயதான காலநிலை ஆர்வலர் லிசிப்ரியா கங்குஜம், இன்று துபாயில் நடந்த ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடு 2023 (COP28) நிகழ்ச்சியில் தீடீரென மேடையில் ஏறி "புதைபடிவ எரிபொருட்களை முடிவுக்குக் கொண்டு வாருங்கள். எங்கள் கிரகத்தையும் நமது எதிர்காலத்தையும் காப்பாற்றுங்கள்" என்று எழுதப்பட்ட ஒரு பலகையை தன் தலைக்கு மேலே பிடித்துக் கொண்டு அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளார்.
மேடையில் பதாகையுடன் ஏறிய அந்த 12 வயது சிறுமி, மேடையில் பலர் முன்னிலையில் ஒரு சிறிய உரையையும் நிகழ்த்தினார். புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் தனது உரையில் பேசினார். பல விஷயங்களை தைரியமாக உலக அரங்கில் பேசிய அந்த சிறுமிக்கு பாராட்டுகளையும், கைதட்டலையும் பெற்றார்.
தலிபான் ஆளும் ஆப்கானிஸ்தான்.. இன்று காலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் - பீதியில் மக்கள்!
COP28ன் டைரக்டர் ஜெனரல் தூதர் மஜித் அல் சுவைடி, அந்த இளம்பெண்ணின் உற்சாகத்தைப் பாராட்டியதாகவும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்வையாளர்களை அவளுக்கு மற்றொரு முறை பலத்த கரவொலி வழங்க ஊக்குவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மணிப்பூரைச் சேர்ந்த அந்த இளம் சமூக ஆர்வலர் அந்த நிகழ்வை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் "இந்தப் போராட்டத்திற்குப் பிறகு அவர்கள் என்னை 30 நிமிடங்களுக்கும் மேலாக காவலில் வைத்தனர். எனது ஒரே குற்றம் - இன்று காலநிலை நெருக்கடிக்கு முக்கிய காரணமான புதைபடிவ எரிபொருட்களை படிப்படியாக அகற்றுவது குறித்து பேசியது தான். அதன் பிறகு நான் COP28 மாநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் தனது X பக்கத்தில் வெளியிட்ட மற்றொரு பதிவில், "புதைபடிவ எரிபொருட்களுக்கு எதிரான எனது பேச்சை இடை நிறுத்தக் காரணம் என்ன? நீங்கள் உண்மையில் புதைபடிவ எரிபொருட்களுக்கு எதிராக நிற்கிறீர்கள் என்றால், நீங்கள் என்னை ஆதரிக்க வேண்டும், உடனடியாக எனது பேட்ஜ்களை வெளியிட வேண்டும். இது ஐ.நா.வின் கொள்கைக்கு எதிரானது ஐ.நா வளாகத்தில் குழந்தை உரிமை மீறல் மற்றும் துஷ்பிரயோகம். ஐ.நா.வில் குரல் எழுப்ப எனக்கு உரிமை உள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.
புதைபடிவ எரிபொருட்களை வெளியேற்றுவது என்பது COP28ல் ஒரு விவாதமாக இருந்து வருகிறது, கிட்டத்தட்ட 200 நாடுகள் இப்பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியில் இணைந்துள்ளன. துபாயில் நடைபெறும் இந்த ஆண்டு காலநிலை மாநாட்டில் 190 நாடுகளைச் சேர்ந்த சுமார் 60,000 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். 12 வயதான அவர் திமோர் லெஸ்ட்டின் சிறப்புத் தூதுவர் அவார்.