போருக்கு தயாராக இருக்க ராணுவத்திற்கு கட்டளை..!! முரண்டு பிடிக்கும் சீனாவுக்கு சமாதி கட்ட முடிவு..!!

By Ezhilarasan Babu  |  First Published Aug 5, 2020, 4:42 PM IST

சீன துருப்புகள் பின் வாங்குவதற்கான செயல்முறைகள் திருப்திகரமாக இல்லாததால், நீண்ட போருக்கு தயாராக இருக்குமாறு இந்திய ராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


சீன துருப்புகள் பின் வாங்குவதற்கான செயல்முறைகள் திருப்திகரமாக இல்லாததால், நீண்ட போருக்கு தயாராக இருக்குமாறு இந்திய ராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்தியாவுக்கும்-சீனாவுக்கும் இடையே கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. ஜூன் 15ஆம் தேதி இந்திய எல்லைக்குள் அத்துமீறி  நுழைந்து சீன ராணுவத்தினர் நடத்திய கொடூர தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் போர் பதற்றம் அதிகரித்தது. இரு நாடுகளும் படைகளை தொடர்ந்து குவித்து வந்ததால், எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற  சூழல் நிலவியது. இதற்கிடையில் இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் தலைமையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து எல்லையில் படைகளை விலக்கிக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன. இதைத்தொடர்ந்து இந்திய-சீன எல்லையில் இருந்து இரு நாடுகளும் படைகளை திரும்பப் பெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சீனா படைகளை பின்வாங்கி  உள்ளது. 

Tap to resize

Latest Videos

ஆனாலும் சர்ச்சைக்குரிய பகுதியான பாங்கொங் த்சோ ஏரி உள்ளிட்ட ஃபிங்கர்-4 மற்றும் ஃபிங்கர்-8 ஆகிய பகுதிகளில் இருந்து சீன ராணுவம் இன்னும் பின் வாங்கப்படவில்லை, இந்நிலையில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை ஒட்டியுள்ள மால்டோவில் இரு நாட்டு மூத்த ராணுவ  தளபதிகள் மட்டத்திலான 5வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டம் 11 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது, அதில் இரு நாடுகளுக்கிடையே அமைதியை உறுதி செய்வதுடன், ஃபிங்கர்-4 மற்றும் ஃபிங்கர்-8 ல் உள்ள படைகளை பின்வாங்க வேண்டும் என்று இந்திய தூதுக்குழு தெளிவாக எடுத்துரைத்தது. விரைவில் சீன ராணுவம் பதற்றம் நிறைந்த அனைத்து பகுதிகளிலிருந்தும் படைகளை விலக்க வேண்டும் என இந்திய அதிகாரிகள் வலியுறுத்தினர். ஏற்கனவே இந்தியாவின் கோரிக்கையின்படி கல்வான் பள்ளத்தாக்கு உட்பட பல பகுதிகளிலிருந்து சீனர்கள் பின் வாங்கியுள்ளனர்.  இருப்பினும் பாங்கொங் த்சோ, ஃபிங்கர்- 4 மற்றும் ஃபிங்கர்- 8 பகுதிகளிலிருந்து படைகள்விலகிச்செல்லவில்லை, 

இது இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.  இந்நிலையில்  பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் சீன பேச்சுவார்த்தைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பாங்கொங் த்சோ ஏரி மற்றும் டெப் சாங் கிலிருந்து சீனப் படைகள் முழுமையாக திரும்ப பெறும் செயல்முறை திருப்திகரமாக இல்லை என்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காது என்றும்  மீண்டும் அதில் தெளிவுபடுத்தப்பட்டது. இந்நிலையில் 3 ஆயிரத்து 488 கிலோ மீட்டர் நீளமுள்ள உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சீன துருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும்,  சீன ராணுவம் சில கட்டுமானங்களை அங்கு செய்ய திட்டமிட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.  இந்நிலையில் உளவுத்துறை தகவலின்படி, மேற்கு லடாக்கின் நடுப்பகுதியில் உத்தரகாண்ட் மற்றும் இமாச்சல் எல்லை மற்றும் கிழக்கு சிக்கிம் மற்றும் அருணாச்சல் எல்லை போன்ற பகுதிகளில் சீனா ராணுவத் துருப்புகளையும் மற்றும் ஆயுதங்களையும் அதிகளவில் திரட்டி வருவதாக தெரியவந்துள்ளது.  

அதே நேரத்தில் உண்மையான கட்டுப்பாட்டு வரிசையிலிருந்து சீனா தன் துருப்புகளை முழுமையாக விலக்கிக்கொள்ள தயாராக இல்லை என்ற இதுபோன்ற சூழ்நிலையில், ஒரு நீண்ட போருக்கு தயாராக இருக்குமாறு ராணுவத்திற்கு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. சில ஆதாரங்களை மேற்கோள்காட்டி இதுகுறித்து செய்திகள் வெளியாகி உள்ளன.  செவ்வாய்க்கிழமை சவுத் பிளாக்கில் நடந்த மறு ஆய்வு கூட்டத்தில் இந்த  எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இந்திய ராணுவமும் அதற்கான முழு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதேபோல் எல்லை நிலைமையை இந்திய வீரர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். கடுமையான குளிர் மற்றும் பனிகளுக்கு இடையில் யுத்தம் செய்யக்கூடிய,  மலையில் போர் பயிற்சி பெற்ற சுமார் 35 ஆயிரம்  இந்திய வீரர்கள் லடாக்கில் நிறுத்தப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கு போதுமான ரேஷன்கள், படைகளுக்கு தேவையான சிறப்பு ஆடைகள், சிறப்பு ஆர்க்டிக் கூடாரங்கள், பிற அத்தியாவசிய உபகரணங்கள்
தயார் படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

 

click me!