அமெரிக்கா எங்கள் நாட்டை கொடுமைப்படுத்துகிறது...!! தாங்கமுடியாமல் கதறும் சீனா..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 5, 2020, 3:11 PM IST
Highlights

அமெரிக்கா தங்களது நாட்டை கொடுமைப்படுத்துகிறது என சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. கொரோனா வைரஸ் விவகாரத்தையடுத்து அமெரிக்கா சீனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் சீனா இவ்வாறு கூறியுள்ளது.

அமெரிக்கா தங்களது நாட்டை கொடுமைப்படுத்துகிறது என சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. கொரோனா வைரஸ் விவகாரத்தையடுத்து அமெரிக்கா சீனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் சீனா இவ்வாறு கூறியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று, தென்சீனக் கடலில் சீன ஆதிக்கம், தைவானில் தலையீடு, ஹாங்காங்கில்  புதிய பாதுகாப்பு சட்டம், உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் மேலும் வலுவடைந்துள்ளது. இந்நிலையில்  சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. 

குறிப்பாக சீனா தனது தொழில்நுட்பத்தின் மூலம், அதாவது டிக் டாக்  போன்ற செயலிகள் மூலம், அமெரிக்காவை உளவு பார்ப்பதாகவும், சீனா அமெரிக்க தரவுகளை திருட பயன்படுத்துவதாகவும்  சீனா மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. எனவே சில தொழில்நுட்பங்களை குறிப்பாக டிக் டாக்  போன்ற செயலிகளை தடை செய்யப் போவதாக அறிவித்துள்ளது.  முன்னதாக சீன ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் பொய்யான தகவல்களை கூறி அமெரிக்காவுக்குள் நுழைந்ததுடன், ஹூஸ்டனில் இயங்கி வந்த சீன தூதரகத்தை மையமாக கொண்டு அமெரிக்காவை உளவு பார்த்ததாக 4 பேரை கைது செய்ததுடன், ஹூஸ்டன் தூதரகத்தை மூடியது. இதற்கு பதலடி கொடுக்கும் வகையில் சீனாவும் செங்டுவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூடியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜதந்திர உறவுகளும் கேள்விக் குறியாகி உள்ளன.

  

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் செய்தியாளர்களிடம் கூறுகையில், அமெரிக்கா சீனாவை கொடுமைப் படுத்துகிறது, சீனாவின் டிக் டாக்கை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க ட்ரம்ப் நிர்பந்திப்பது, உலக வர்த்தக அமைப்பின் வெளிப்படைத்தன்மைக்கும், அதன் சட்ட திட்டங்களுக்கும் எதிரானது எனக் கூறியுள்ளார். மேலும் எந்த ஆதாரமும் இல்லாமல் தேசிய நலன்களை பாதுகாப்பதாக கூறி அமெரிக்கா அல்லாத நிறுவனங்களை நியாயமற்ற முறையில் முடக்க அமெரிக்கா முயற்சிக்கிறது. அமெரிக்க பாதுகாப்பிற்கு சீன நிறுவனங்கள் அச்சுறுத்தலாக இருப்பதாக கூறுவதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. தகுதியும் இல்லை என்று அவர் கூறினார். இந்த நிறுவனங்கள் சர்வதேச விதிமுறைகள் மற்றும் அமெரிக்க சட்டங்களை பின்பற்றியே தங்கள் வணிக நடவடிக்கைகளை செய்கின்றன என்று அவர் கூறினார். 

 

click me!