இப்படி ஒரு சிகிச்சை தேவையா..? உயரத்தை அதிகரிக்க அறுவை சிகிச்சை கொண்டவருக்கு நேர்ந்த சோகம்..!!

By Kalai Selvi  |  First Published Jan 22, 2024, 7:29 PM IST

எப்போதும் அழகு அழகு என்று அழகின் பின்னால் ஓடாதீர்கள். அழகுக்காக நீங்கள் செய்யும் காரியம் மோசமான விளைவிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.


இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலானோர் தங்கள் அழகை மேம்படுத்த பல சிகிச்சைகள் செய்து கொள்கின்றனர். உதடுகள், மூக்கு, கண்கள், காதுகள், இடுப்பு, வயிறு உள்ளிட்ட உடலின் பல பாகங்களில் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். 

இந்த அறுவை சிகிச்சைகள் அனைத்தும் எப்போதும் வெற்றிகரமாக இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பலமுறை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். சிலர் உயிர் இழந்துள்ளனர். இதுகுறித்த பல செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டே இருக்கும். இந்த அறுவை சிகிச்சைகள் அனைத்தும் பற்றி நீங்கள் நிறைய கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் அந்தவகையில், உயரமாகுவதற்கான அறுவை சிகிச்சை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

Tap to resize

Latest Videos

இப்போதெல்லாம் பலர் தங்கள் உயரத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள். அவர்கள் குட்டையாக இருப்பதை விரும்பவில்லை. இதன்காரணமாக, அவர்கள் உயரத்தை அதிகரிக்க பல உடற்பயிற்சி செய்கின்றன. ஆனால் இப்படி எந்தவொரு உடற்பயிற்சியும் இல்லாமல் உயரத்தைஅதிகரிக்கும் அறுவை சிகிச்சை ஒன்று உள்ளது தெரியும..

ஆம். ஆனால் இது எல்லோருக்கும் வெற்றியளிப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், இது ரொம்பவே, பயமாக இருக்குமாம். தற்போது இந்த அறுவை சிகிச்சையால் 29 வயது இளைஞர் ஒருவர் அவதிப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். மேலும் மிகவும் பயங்கரமான இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது உயரம் 2 அங்குலம் அதிகரித்துள்ளதாக கூறினார். ஆனால் உயரம் அதிகரிப்ப்பை விட அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவருக்கு பிரச்சனை அதிகரித்துள்ளதாகவும், இதனால் மிகுந்த வேதனையில் இருப்பதாகவும், சரியாக தூங்க கூட முடியவில்லை என்று வேதனையாகக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:  ட்ரில்லர் வைத்து தலையில் சர்ஜரி.. தனக்கு தானே ஆபரேஷன் செய்துகொண்ட நபர் - இறுதியில் நடந்து என்ன?

உயரமாவதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டவரின் பெயர் ஜெபர்சன் கோசியோ. இவர் கொலம்பியாவில் வசிக்கிறார். ஜெபர்சன் முதலில் 5 அடி 8 அங்குலம் தான் இருந்தாராம். நான்கு மாதங்களுக்கு முன் அறுவை சிகிச்சை மூலம் தனது உயரத்தை 6 அடியாக உயர்த்தியுள்ளார் என்று அவர் சமூக வலைதளத்தில்,11.1 பின்தொடர்பவர்கள் முன்னிலையில் கூறினார். 

இதையும் படிங்க:  மிக மிக அரிய நிகழ்வு.. தும்மலை அடக்க முயன்ற நபருக்கு மூச்சுக்குழாயில் ஏற்பட்ட விபரீதம்.. என்ன நடந்தது?

இந்த அறுவை சிகிச்சைக்காக 175,000 டாலர்கள் அதாவது சுமார் 1.45 கோடி ரூபாய் செலவிட்டதாக அவர் கூறினார். இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு கோசியோ நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டார். ஆனால் அவர் தனது முடிவை ஆதரித்துள்ளார். நான் மனிதன் எனக்கும் என் உறுப்புகள் மீது அளவுகடந்த அன்பு உண்டு என்றார். மேலும் நான் விரும்பாததை மாற்றுவதற்கு என்னிடம் போதுமான பணம் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஆனால் இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அவருக்கு வலி அதிகரித்துள்ளதாம். அது குறையவில்லை. இரவு மாத்திரை சாப்பிட்டாலும் தூக்கம் வரவில்லை. தற்போது வலியை நிறுத்துவதற்கு 
மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய போகிறாராம். அதுபோல், அவருக்கு தசைகள் மற்றும் எலும்புகளை இணைக்கும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. அதற்கான அறுவை சிகிச்சை வரும் 25-ம் தேதி நடைபெறவுள்ளது.

click me!