புடினுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் கருங்கடல் மாளிகையில் கிரேக்க கடவுள்களின் சிலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பளிங்கு நீச்சல் குளம், ஒரு ஆம்பிதியேட்டர், ஒரு அதிநவீன ஐஸ் ஹாக்கி ரிங்க், ஒரு வேகாஸ் பாணி கேசினோ, ஒரு இரவு விடுதி போன்றவை இருப்பதாகக் கூறப்படுகிறது.
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினின் அதிகாரப்பூர்வ ஆண்டுச் சம்பளம் 140,000 டாலர் எனக் கூறினாலும், அவரது நிகர மதிப்பும் வாழ்க்கை முறையும் வித்தியாசமானது.
800 சதுர அடி அபார்ட்மெண்ட், ஒரு டிரெய்லர் மற்றும் மூன்று கார்கள் புடின் பெயரில் உள்ளன. ஆனால், தொடர்ச்சியாக வெளியாகும் தகவல்கள் அவர் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை நடத்தி வருகிறார் என்று கூறுகின்றன. புடினின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலர்கள் என்று சொல்லப்படுகிறது. ரஷ்யாவைச் சேர்ந்த தொழிலபதிபர் முதல் பலர் 1990 களில் இருந்து புடினின் சொத்துக்கள் பற்றி வியப்பூட்டும் செய்திகளைக் கூறிவருகின்றனர்.
புடினுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் கருங்கடல் மாளிகை குறித்து மாற்றுபட்ட தகவல்கள் இருக்கின்றன. ஒரு குன்றின் மேல் அமைந்திருக்கும் இந்த மாளிகையில் கிரேக்க கடவுள்களின் சிலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பளிங்கு நீச்சல் குளம், ஒரு ஆம்பிதியேட்டர், ஒரு அதிநவீன ஐஸ் ஹாக்கி ரிங்க், ஒரு வேகாஸ் பாணி கேசினோ, ஒரு இரவு விடுதி போன்றவை இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த மாளிகையின் உட்புறத்தில் 500,000 டாலர் மதிப்புள்ள சமையல் அறை பொருட்கள், 54,000 டாலர் மதிப்புள்ள பார் டேபிள் மற்றும் 850 டாலர் மதிப்புள்ள இத்தாலிய டாய்லெட் பிரஷ்கள் மற்றும் 1,250 டாலர் மதிப்புள்ள டாய்லெட் பேப்பர் ஹோல்டர்களைக் கொண்ட அலங்கரிக்கப்பட்ட குளியலறைகள் இருக்கிறதாம். இதையெல்லாம் பராமரிக்க ஆண்டுக்கு 2 மில்லியன் டாலர் செலவாகும். பராமிப்புப் பணிகளுக்காக 40 பேர் கொண்ட குழுவும் இருக்கிறதாம்.
புடினின் ஆடம்பரங்களின் பட்டியலில் இன்னும் 19 வீடுகள், 700 கார்கள், 58 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உள்ளன. குறிப்பாக "தி ஃப்ளையிங் கிரெம்ளின்" என்று பெயரிடப்பட்ட 716 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஜெட் விமானமும் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 700 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஷெஹராசாட் என்ற மெகா படகும் புடினுக்குச் சொந்தமாக இருக்கிறதாம்.
60,000 டாலர் மதிப்புள்ள படேக் பிலிப் பெர்பெச்சுவல் காலண்டர் மற்றும் 500,000 டாலர் மதிப்புள்ள ஏ. லாங்கே & சோஹ்னே டூர்போகிராஃப் உள்பட பல ஆடம்பரமான கைக்கடிகாரங்களின் சேகரிப்பும் ரஷ்ய அதிபர் புடின் வசம் உள்ளதாம். இந்தக் வாட்ச்களின் மதிப்பு புடின் வாங்கும் சம்பளத்தைவிட ஆறு மடங்கு அதிகம் என்று தகவல் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.