பனிப்பாறைகளுக்கு அடியில் 48ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் புதைந்திருந்த ஜாம்பி வைரஸ் பருவநிலை மாற்றத்தினால் பனிப்பாறைகள் உருகி மீண்டும் உயிர்பெற்றுள்ளன.
பனிப்பாறைகளுக்கு அடியில் 48ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் புதைந்திருந்த ஜாம்பி வைரஸ் பருவநிலை மாற்றத்தினால் பனிப்பாறைகள் உருகி மீண்டும் உயிர்பெற்றுள்ளன.
ஹாலிவுட் திரைப்படங்ளில் வருவதுபோல் ஜாம்பி வைரஸ் என்றதும் ஜாம்பிக்கள் என்று நினைக்க வேண்டாம். ஜாம்பி வைரஸ் என்பது ஏறக்குறைய 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஒற்றை செல் அமீபா வைரஸ். இந்த வைரஸால் மனிதர்களுக்கு பாதிப்பு இருக்குமா என்பது இதுவரை ஆய்வுகளில் இல்லை.
இந்த ஜாம்பி வைரஸ் குறித்து முழுமையான ஆய்வுகள் ஏதும் நடக்கவில்லை என்றாலும், மனிதர்களுக்கு இந்த ஜாம்பி வைரஸால் பேராபத்து ஏதும் வருமா என்பது உறுதியாகக் கூற முடியாத நிலையில்தான் ஆய்வாளர்கள் உள்ளனர்.
ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள பெர்மாப்ரோஸ்டிலிருந்து இந்த வைரஸ்களை பிரித்து பிரான்ஸ் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். இந்த வைரஸ்கள் 48,500 ஆண்டுகளுக்கு முன் பனிப்பாறைகளுக்குள் புதைந்திருந்த ஜாம்பி வகை வைரஸ் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
பனிப்பாறைகளுக்கு அடியில் இருக்கும் இந்த ஜாம்பி வைரஸ்களை பாண்டோராவைரஸ் யடோமா என்றும் ஆய்வாளர்கள் அழைக்கிறார்கள். இந்த ஜாம்பி வைரஸ் பழங்கால அமீபா வகை வைரஸ்களாகும்.
ஒட்டுமொத்தமாக 13 வகை வைரஸ்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்து அதற்கு உயிர்கொடுத்து, ஆய்வு செய்து வருகிறார்கள், அதில் ஒரு வைரஸ்தான் ஜாம்பி வகை வைரஸ்.
மனிதர்களின் செயல்பாடுகளால் பருமநிலையில் மாற்றம் ஏற்படும்போது, புவி வெப்பமடைகிறது. புவியின் வெப்பத்தால், பனிப்பாறைகள் உருகி கடல்மட்டம் உயர்ந்து மனிதர்கள் வாழும்பகுதியில் நீர் சூழ்கிறது. இது ஒருபக்கம் இருந்தாலும், பனிப்பாறைகள் உருகும்போது, ஆயிரக்கணக்கான ஆண்டுகள், பனிப்பாறைகளுக்குள் அமைதியாக தூங்கிக்கொண்டு, உயிர்பெறமுடியாமல் இருக்கும் கொடிய வைரஸ்கள், அதற்குகிய சூழல் கிடைத்தவுடன் மீண்டும் உயிர்பெற்றுவிடும்.
அதனால்தான், பருவநிலை மாறுபாட்டைக் குறைக்க வேண்டும் என்று ஐ.நா., ஜி20, உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.
சீனாவில் மீண்டும் தனிமை முகாம்கள் தற்காலிக மருத்துவமனைகள்; அதிர வைக்கும் தகவல்கள்!!
இந்த ஜாம்பி வைரஸ்களை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தபோது ஆயிரக்கணக்காண ஆண்டுகளாக பனிப்பாறையில் புதைந்தாலும், இன்னும் மனிதர்களுக்கு தீங்குவிளைவிக்கும் தன்மை இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
வளிமண்டல வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகள் உருகுவது, மீத்தேன் போன்ற கரியமில வாயுக்களை மனிதர்கள் வெளியிடுதன் மூலம் பருவநிலை மாற்றத்தை மோசமாக்கும் என்று விஞ்ஞானிகள் நீண்ட காலமாக எச்சரித்து வருகின்றனர்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்ட 13 வகை வைரஸ்கள் உயிர்பெற்றாலும் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ஆபத்து விளைவிக்கும் வாய்ப்பு குறைவுதான் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அது தொடர்பான ஆய்வுகளையும் செய்து வருகிறார்கள்.
ஒருவேளை மனிதர்களையும், விலங்குகளையும் தாக்கும் சாத்தியம் இந்த வைரஸ்களுக்கு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டால் விளைவு மோசமானதாக இருக்கும். அதற்கு முன்பாகவே ஆராய்ச்சியை நாங்கள் தொடங்கியுள்ளோம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
சீனா-வில் வேகமெடுக்கும் கொரோனா பரவல்! ஒரேநாளில் 40ஆயிரம் பேர் பாதிப்பு! காரணம் என்ன?
இந்த வைரஸ்கள் பனிப்பாறையில் இருந்து வெளிப்பட்டால் எவ்வளவு நாட்கள் உயிரோடு இருக்கும், எவ்வாறு உயிர்பெற்று வாழும், எவ்வாறு தாக்கும் என்பதை கணிப்பது கடினம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஆனால் மனிதர்களின் செயல்பாடுகளால் பருவநிலை மாறுபாடு அதிகரித்து பனிப்பாறைகள் வேகமாக உருகுவது பெரிய ஆபத்துக்களை உருவாக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்