சீன நகைச்சுவை நிறுவனத்திற்கு 2 மில்லியன் டாலர் அபராதம் விதிப்பு.. என்ன காரணம் தெரியுமா?

By Ramya s  |  First Published May 20, 2023, 3:54 PM IST

ராணுவம் குறித்து நகைச்சுவை கருத்தை கூறியதற்காக சீன நகைச்சுவை நிறுவனத்திற்கு $2 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


சீனாவின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலா பணியகத்தின் பெய்ஜிங் பிரிவு, ஷாங்காய் சியாவோகுவோ கலாச்சார மீடியா என்ற நிறுவனத்திற்கு 13.35 மில்லியன் யுவான் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது., லி ஹாவ்ஷியின் சமீபத்திய நிகழ்ச்சியை கண்டறிந்த பிறகு"சட்டவிரோத லாபத்தில்" 1.35 மில்லியன் யுவான் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ஸ்டாண்ட்-அப் காமெடி போன்ற நிகழ்ச்சிகள், முக்கிய சோசலிச விழுமியங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று சீன அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். எனினும் ராணுவத்தை பற்றி நகைச்சுவையாக பேசியதால், சீன அரசு சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது. "எந்தவொரு நிறுவனமோ அல்லது தனிநபரோ சீன ராணுவத்தை அவதூறாக நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்," என்று கலாச்சார பணியகம் தெரிவித்துள்ளது.

Latest Videos

undefined

இதையும் படிங்க : அணு ஆயுதம் வேண்டாம்.. இந்தியா - சீனா பிரச்சனைக்கு காரணம் என்ன? பிரதமர் மோடி ஓபன் டாக் !!

மே 13 அன்று பெய்ஜிங்கில் நடந்த ஸ்டாண்ட்-அப் காமெடி செட்டில் லி ஹவோஷி என்ற நபர் நகைச்சுவை செய்துள்ளார். மேலும் தனது நகைச்சுவையின் விளக்கத்தை ஆன்லைனில் அவர் வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து லீ ஹவோஷி, சீன சமூக ஊடகங்களில் வைரலானார், சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தை (பிஎல்ஏ) இழிவுப்படுத்தும் விதமாக அவர் கருத்து தெரிவித்தாக கூறப்படுகிறது.

மேலும் அந்த நகைச்சுவையில் தான் தத்தெடுத்த இரண்டு தெருநாய்கள் அணிலைத் துரத்துவதைப் பார்த்ததாகவும், அது ஒரு நல்ல வேலை பாணி வேண்டும், போர்களில் போராடி வெற்றி பெற முடியும்" என்ற வாசகத்தை நினைவுபடுத்தியதாகக் கூறினார். அந்த வாசகம் சீன ராணுவத்தின் பணி நெறிமுறையை  பாராட்ட சீன் அதிபர் ஜி ஜின்பிங் 2013 இல் பயன்படுத்திய வாசகம் ஆகும்.

2015 இல் ஷாங்காயில் நிறுவப்பட்டது, Xiaoguo கலாச்சார நிறுவனத்தின் புகழ் சீனாவின் ஸ்டாண்ட்-அப் காமெடியுடன் சேர்ந்தே வளர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான உள்ளூர் நகைச்சுவை நடிகர்களின் சுயவிவரத்தை உயர்த்துவதில் பெயர் பெற்றது.

எனினும் அந்நிறுவனம் மீது அபராதம் விதிக்கப்படுவது இது முதல்முறையல்ல. ஜூலை 2021 இல், பெண்களை புறக்கணிக்கும் கருத்துகளுடன் உள்ளாடைகளின் பிராண்டிற்கு ஒரு நகைச்சுவை நடிகரின் ஒப்புதல் அளிக்கும் விளம்பரங்களை வெளியிட்டதற்காக நிறுவனத்திற்கு 200,000 யுவான் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : விமான விபத்தில் சிக்கிய குழந்தைகள்.. 17 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு.. என்ன நடந்தது?

click me!