விமான விபத்தில் சிக்கிய குழந்தைகள்.. 17 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு.. என்ன நடந்தது?

By Ramya s  |  First Published May 20, 2023, 2:18 PM IST

கொலம்பியா விமான விபத்தில் சிக்கிய 4 குழந்தைகள் 17 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டனர்.


மே 1-ம் தேதி கொலம்பியாவின் காட்டுப்பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று காணாமல் போனது. அந்த சிறிய விமானத்தில் 4 குழந்தைகள் தங்கள் தாயுடன் பயணம் செய்தனர். ஒரு விமானி மற்றும் துணை விமானி ஆகியோரும் அந்த விமானத்தில் இருந்தனர். தெற்கு கொலம்பியாவில் உள்ள அமேசான் காடுகளின் அரராகுவாராவிலிருந்து சான் ஜோஸ் டெல் குவேரியாருக்கு செஸ்னா 206 இலகுரக விமானம் சென்று கொண்டிருந்தது.  ஆனால் விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி, விமானத்தில் எஞ்சின் கோளாறுகள் கூறியுள்ளார். இதையடுத்து விமானத்தின் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட வீரர்களை உள்ளடக்கிய தேடுதல் குழு மற்றும் மோப்பை நாய்களை கொலம்பியா அரசு அமைத்தது. அந்த குழுவின் பெரும் தேடுதல் முயற்சிக்குப் பிறகு, காணாமல் போன இரண்டு வாரங்களுக்குப் பிறகு, கடந்த திங்கள்கிழமை விமானம் கண்டுபிடிக்கப்பட்டது. விமானி, துணை விமானி மற்றும் நான்கு குழந்தைகளின் தாயான 33 வயதான Magdalena Mucutuy ஆகியோரின் உடல்கள் Caquetá மாகாணத்தில் விபத்து நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் குழந்தைகளின் உடல்கள் கிடைக்கவில்லை.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க : பப்புவா நியூ கினியாவை தன்வசப்படுத்திய சீனா; அலறும் அமெரிக்கா; பிரதமர் மோடியின் முதல் பயணம்!!

எனினும் அந்த குழந்தைகள் விபத்தில் இருந்து தப்பியதற்கான தடயங்களை தேடல் குழுக்கள் கண்டறிந்தன. மோப்ப நாய்கள் ஒரு குழந்தையின் குடிநீர் பாட்டில், ஒரு ஜோடி கத்தரிக்கோல், சில பாதி சாப்பிட்ட பழங்கள் ஆகியவற்றைக் கண்டன. தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த கர்னல் ஜுவான் ஜோஸ் லோபஸ் இதுகுறித்து பேசிய போது "விமானத்தில் இருந்த குழந்தைகள் உயிருடன் இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். விபத்து நடந்த இடத்திலிருந்து விலகி வேறு இடத்தில் தடயங்கள் கிடைத்துள்ளன” என்று தெரிவித்தார்.

குழந்தைகள் காட்டில் அலைந்திருக்கக்கூடும் என்று எண்ணி, இராணுவம் ஹெலிகாப்டர்களை அனுப்பியது. இந்த சூழலில் விமான விபத்தில் காணாமல் போன குழந்தைகள் கிடைத்துவிட்டதாக கடந்த புதன்கிழமை தகவல் பரவியது. விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள  கச்சிபோரோவில் தரையிறங்கிய தேடுதல் குழு அதிகாரி ஒருவருக்கு, டுமர் என்ற தொலைதூர இடத்திலிருந்து ரேடியோ மூலம் உள்ளூர்வாசிகள் தொடர்பு கொண்டதாகவும், குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதாகவும் கூறப்பட்டது. 

அதே போல் உள்ளூர் வானொலி நிலையங்களும் புதன்கிழமை, குழந்தைகள் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவர்கள் ஆற்றின் மூலம் கச்சிபோரோவுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் அறிவித்தனர். மேலும் குழந்தைகள் உயிருடன் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் விமான விபத்தில் காணாமல் போன நான்கு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார். பழங்கள் மற்றும் காட்டில் உயிர்வாழும் திறன் பற்றிய ஹுய்டோட்டோ மக்களின் அறிவு ஆகியவை காரணமாக இளம் குழந்தைகள் உயிர் பிழைத்திருக்கலாம் கருதப்படுகிறது.

இதையும் படிங்க : ஜப்பானில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியை கட்டித் தழுவி தனது நட்பை பரிமாறினார்!!

click me!