சீனாவின் ஹெனான் மற்றும் அன்ஹூய் மாகாணங்களில் மக்களை வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் பணம் எடுக்கவிடாமல் பாதுகாப்புப்படையினர் சாலையின் ஓரத்தில் வரிசையாக டாங்கிகளை நிறுத்தி அச்சுறுத்தியுள்ளனர்
சீனாவின் ஹெனான் மற்றும் அன்ஹூய் மாகாணங்களில் மக்களை வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் பணம் எடுக்கவிடாமல் பாதுகாப்புப்படையினர் சாலையின் ஓரத்தில் வரிசையாக டாங்கிகளை நிறுத்தி அச்சுறுத்தியுள்ளனர்.
இ்ந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
58ஆயிரத்துக்கும் அதிகமான பொதுத்துறை காப்பீடு ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம்
என்ன பிரச்சினை
சீனாவில் உள்ள அரசு வங்கிகளான யூஸ்ஹூ ஸின்மின்செங் கிராம வங்கி(சூசாங் சிட்டி, ஹீனன் மாகாணம்), க்செங் ஹூவாங்குவாய் வங்கி(செங்குய் ஹீனன் மாகாணம்),சாங்கியா ஹூய்மின் கிராம வங்கி(ஹூமாதியன் நகரம், ஹீனன் மாகாணம்), நியூ ஓரியன்டல் கிராம வங்கி(கெய்பெங் நகரம், ஹீனன் மாகாணம்) ஹூவாய்ஹி ரிவர் கிராம வங்கி(பெங்பூ நகரம், அன்ஹூய் மாகாணம்), யிக்ஸியான் கவுன்டி கிராம வங்கி( ஹூவாங்ஷான் நகரம், அன்ஹூய் மாகாணம்) ஆகிய வங்கிகள் மக்களிடம் இருந்து டெபாசிட் பெற்றன.
ஆனால் 6 வங்கிகளும் கடந்த ஏப்ரல்மாதத்திலிருந்து லட்சக்கணக்கான டெபாசிட்தாரர்களின் பணத்தை எடுக்கவிடாமல் முடக்கி வைத்தனர். இதன் மதிப்பு மட்டும் 600 கோடி டாலர் இருக்கும் எனத் தெரிகிறது.
மோசமான உலகச்சூழிலும் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாகவே உள்ளது: சக்திகாந்த தாஸ் பெருமிதம்
போாரட்டம்
வங்கி டெபாசிட்டை முடக்கியதால், லட்சக்கணக்காண மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியது. வங்கிகள் தங்களின் டெபாசிட்களை முடக்கியதற்கு எதிராக கடந்த 2 மாதங்களாக மக்கள் போராடி வந்தனர்.
குறிப்பாக ஹீனன் மாகாணத்தில் தலைநகர் ஹெங்ஜூவில் பல போராட்டங்களை மக்கள் நடத்தியபோதிலும், அது ஆட்சியாளர்கள், அதிகாரிகள் காதில் விழவில்லை. கடந்த இரு வாரங்களுக்கு முன் மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து படிப்படியாக மக்களின் பணம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
டாங்கிகள் நிறுத்தம்
இந்நிலையில் ஷான்டாக் மாகாணத்தில் உள்ள ரிஸ்ஹாவ் எனும் நகரில் உள்ளூர் மக்கள் வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் பணத்தை எடுக்கவிடாமல் வங்கிக்கு முன்பாக டாங்குகள் நிறுத்தப்பட்டுள்ள காட்சி வெளியானது.
மக்களுக்கு பணம் திரும்ப வழங்கப்படும் என ஹெனான் மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டும் இன்னும் பணம் முழுமையாக வழங்கப்படவி்லலை. வங்கியில் இருக்கும் தங்கள் சொந்தப் பணத்தைக்கூட எடுக்கவிடாமல் அரசு பீரங்கிகளை நிறுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது.
வங்கிகளை காக்க வேண்டும், முதலீட்டாளர்களைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் டாங்கிகள் நிறுத்தப்பட்டதாக ஹெனான் மாகாண செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்
தங்கம் விலை பெரும் வீழ்ச்சி: சவரன் ரூ.37,000க்கும் கீழ் செல்லுமா? இன்றைய நிலவரம் என்ன?
வங்கிக்கு செல்ல ஏராளமான மக்கள் நீ்ட வரிசையில் நின்ற போதிலும், அவர்களை வரவிடாமல் டாங்கிகளை வைத்து தடுத்துள்ளது சீன ராணுவம்.இதைப் பார்க்கும்போது, கடந்த 1989ம் ஆண்டு தினாமென் சதுக்கத்தில் நடந்த சம்பவங்கள்தான் நினைவுக்கு வருகின்றன.இதே கருத்தை சமூக வலைத்தளத்தில் ஏராளமன நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.