வெயிலை சமாளிக்க செம்ம மாஸா ஷூ, கூலிங் கிளாஸ்.. இணையத்தில் வைரலாகும் அமெரிக்க மோப்ப நாய்.

By Ezhilarasan Babu  |  First Published Jul 22, 2022, 2:37 PM IST

அமெரிக்காவில் வாட்டி வதைக்கும் கடும் வெயிலை சமாளிக்க அந்நாட்டு மோப்பநாய் பிரிவில் பணியாற்றும் நாய்களுக்கு அந்நாட்டு போலீசார் ஷூ கூலிங் கிளாஸ் அணிவித்து பாதுகாத்து வருகின்றனர்.


அமெரிக்காவில் வாட்டி வதைக்கும் கடும் வெயிலை சமாளிக்க அந்நாட்டு மோப்பநாய் பிரிவில் பணியாற்றும் நாய்களுக்கு அந்நாட்டு போலீசார் ஷூ கூலிங் கிளாஸ் அணிவித்து பாதுகாத்து வருகின்றனர். இதற்கான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. காவல் துறையின் இந்த மனிதாபிமான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் பருவ நிலை மாற்றம் காரணமாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பெரும்பாலான நகரங்களில்  வெப்ப அலை வீசி வருகிறது, கலிபோர்னியா, டெக்சாஸ், நியூ இங்கிலாந்து உட்பட சில பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட் வரை  அதிக அளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் வெப்பத்தில் இருந்து தப்பிக்கவும் அதன் கொடூரத்தில் இருந்து பாதுகாக்கவும் கலிபோர்னியாவில்  போலீசார் மோப்பநாய்கள் பிரிவில் பணியாற்றும் நாய்களுக்கு வெப்பத்தில் இருந்து பாதுகாப்பதற்காக பிரத்யேக ' ஷூ '  ' கூலிங் கிளாஸ்' போன்றவற்றை அணிவித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

இதுதொடர்பான வீடியோக்கள் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தோர் என்ற நாய் பிரத்தியேக ஷூ மற்றும் சன் கிளாஸ் அணிந்து காட்சியளிக்கிறது, இது நாய்களுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஷூ , கூலிங்கிளாஸ்கள் ஆகும்,  சாலைகளில் நடக்கும்போது இந்த ஷூ அதிக அளவிலான வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் அளவிற்கு தயாரிக்கப்பட்டுள்ளது, கூலிங் கிளாஸ்கள் அதிக வெப்பம், அதில் உள்ள புற ஊதாக் கதிர்களிலிருந்து நாய்களை பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான வெப்பத்தை சமாளிக்கும் வகையில் அது உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: இலங்கையில் தொடரும் பதற்றம்; நாய் ஆக இருக்க விரும்பவில்லை எனக் கூறி கடற்படையில் 2 பேர் ராஜினாமா!!

இதுதொடர்பாக பேஸ்புக்கில் வெளியாகி உள்ள வீடியோவில் ஒரு போலீஸ் அதிகாரி தனது நாய்க்கு ஷூ மற்றும் கூலிங்கிளாஸ் அணிவிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த வீடியோவில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் அந்த அதிகாரி பகல் நேரத்தில் நடைப் பயிற்சிக்கு அழைத்துச் செல்லும்போது இதுபோன்ற பாதுகாப்புடன் நாய்களை கூட்டிச் செல்வதாக கூறுகிறார், தோராயமாக 70 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் தார் சாலைகளில் 120 டிகிரி பாரன்ஹீட் ஆக எதிரோலிக்கும் எனவே சாலைகளில் நாய்கள் நடக்கும்போது 30 வினாடிகளில் அதன் பாதங்கள் வெப்பத்தில் கருத வாய்ப்பிருக்கிறது. மக்களும் பாதுகாப்பாக சாலையில் நடக்க வேண்டும் என போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.

 

மேலும் பொதுமக்கள் சாலையில் நடைபாதைக்கு அழைத்து வரும் தங்களது செல்லப்பிராணிகளை சாலையில் விட வேண்டாம் என்றும், வெப்பநிலையை கணித்து சாலையில் நடக்க மறந்துவிடாதீர்கள் என்றும்  நமது பாதங்களை வெப்பத்தில் பாதிக்கப்படுவதை போன்றுதான் நமது செல்லப் பிராணிகளும் பாதிக்கும் என்றும் போலீசார் அறுவுறுத்தியுள்ளனர். 

இதையும் படியுங்கள்: Dinesh Gunawardena: இலங்கையின் புதிய பிரதமரானார் தினேஷ் குணவர்தன!!

தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ள இந்த வீடியோ மின்னல் வேகத்தில் பரவி வருகிறது, பலரும் இந்த வீடியோவை வரவேற்று பாராட்டி வருகின்றனர். காவல்துறையில் பணியாற்றும் நாய்களை அக்கறையுடன் கவனித்துக் கொள்ளும் போலீசாரையும் பலரும் மனதாரா பாராட்டி வருகின்றனர். தோர் மிகவும் அழகான, கடின மக உழைக்கும் நாய் என்றும் ஷூ மற்றும் கூலிங்கிளாஸ் இந்த நாய் மேலும் அழகாக தெரிகிறது என்றும் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
 

click me!