இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன தேர்வு செய்யப்பட்டு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் அந்த நாட்டின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுக் கொண்டு இருந்தார். இந்த நிலையில் தினேஷ் குணவர்தனவுக்கு ரணில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன தேர்வு செய்யப்பட்டு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் அந்த நாட்டின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுக் கொண்டு இருந்தார். இந்த நிலையில் தினேஷ் குணவர்தனவுக்கு ரணில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவர் கோத்தபய ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியைச் சேர்ந்தவர்.
இலங்கையின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்த பின்னர் அந்த நாட்டில் அரசியல் நிகழ்வுகள் வேகம் எடுத்து வருகிறது. புதிய அதிபராக நேற்று முன்தினம் ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு வயது 73. இலங்கை அரசில் நீண்ட அனுபவம் பெற்றவர்.
இவரது பெற்றோர்கள் பிலிப் குணவர்தன, குசம குணவர்தனவுக்கு 1949ஆம் ஆண்டு, மார்ச் 2ஆம் தேதி பிறந்தார். இவரது பெற்றோர்கள் இருவரும் சுதந்திர போராட்ட வீரர்களாக இலங்கையின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள்.
கொழும்புவில் பள்ளிக் கல்வி பெற்ற இவர் பின்னர் உயர் கல்வி பெறுவதற்காக வெளிநாடு சென்றார். நிஜென்ட்ரோ பிசினஸ் பல்கலையில் டிப்ளமோவில் பிசினஸ் கல்வி முடித்தார். பின்னர், நெதர்லாந்திலும் கல்வி பயின்றார்.
Watch : இலங்கை போராட்டத்திற்கு முடிவு கட்டும் ரணில் அரசு! பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்!
கல்வி முடித்து இலங்கை திரும்பிய தினேஷ் குணவர்தன அரசியலில் ஈடுபட்டார். மகாஜன ஏக்சாத் பெரமுனா என்ற கட்சியை துவக்கினார். முதன் முறையாக 1983ஆம் ஆண்டு அப்போதைய மகரகாமா என்று அழைக்கப்பட்ட பார்லிமென்ட்டுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
போக்குவரத்துறை அமைச்சர் (அக்டோபர் 2000 – செப்டம்பர் 2021)
போக்குவரத்து மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் (செப்டம்பர் 2001 – டிசம்பர் 2001)
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் (ஏப்ரல் 2004 – ஜனவரி 2007)
உயர் கல்வித்துறை துணை அமைச்சர் (ஏப்ரல் 2004 – நவம்பர் 2005)
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் (ஜனவரி 2007 – ஏப்ரல் 2010)
நீர் வழங்கல் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் (ஏப்ரல் 2010 – ஜனவரி 2015)
மேற்கத்திய வளர்ச்சித்துறை அமைச்சர் (நவம்பர் 2018 – டிசம்பர் 2018)
வெளியுறவு விவகாரம், திறன் வளர்ப்பு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் (நவம்பர் 2019 – மார்ச் 2020)
வெளிநாட்டுத்துறை அமைச்சர் (ஆகஸ்ட் 2020 – ஆகஸ்ட் 2021)
கல்வித்துறை அமைச்சர் (ஆகஸ்ட் 2021 – ஏப்ரல் 2022)
பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சர் (ஏப்ரல் 2022 – இன்று வரை)
இதுமட்டுமின்றி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் கொறடாவாகவும், எதிர்க் கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி… உணவுக்காக பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள்!!