கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தத்தளிக்கும் இலங்கையில், உணவுக்காகவும் மருந்துக்காகவும் பெண்கள் பாலியல் தொழிலுக்கு மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தத்தளிக்கும் இலங்கையில், உணவுக்காகவும் மருந்துக்காகவும் பெண்கள் பாலியல் தொழிலுக்கு மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் பொருளாதாரம் ஏறக்குறைய வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் ஜவுளித் துறை மோசமான நிலைக்குத் திரும்பியுள்ளது. இந்த நிலையில், இதனால் ஜவுளித்துறையில் பணியாற்றி வந்த பெண்கள் வேலை பறிபோனதை அடுத்து தற்போது தற்காலிக விபச்சார விடுதிகள் எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டு ஜனவரி பிற்பகுதி வரை ஆயுர்வேத ஸ்பாக்கள், தொங்கும் திரைச்சீலைகளின் தற்காலிக அறைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய தற்காலிக படுக்கைகள் என ஜவுளித் தொழிலில் இருந்த பெண்கள் அனைவரும் விபச்சாரத் தொழிலுக்கு மாறியதை அடுத்து விபச்சார விடுதிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: இலங்கையின் 8வது அதிபராக பொறுப்பேற்றார் ரணில் விக்ரமசிங்கே!!
இந்த ஆண்டு ஜனவரி முதல் இலங்கையின் தலைநகர் கொழும்பில் பாலியல் தொழிலில் சேரும் பெண்களின் எண்ணிக்கையில் 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுக்குறித்து பாலியல் தொழிலாளி ஒருவர் கூறுகையில், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் வேலை இழக்க நேரிடும். அதற்கு சிறந்த தீர்வு பாலியல் தொழிலே என்றும் கேள்விப்பட்டோம். எங்களின் மாதச் சம்பளம் சுமார் ரூ.28,000. காலப்போக்கில் அதிகபட்சமாக ரூ.35,000 வரை கிடைக்கும். ஆனால் பாலியல் தொழிலில் ஈடுபடுவதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.15,000. எல்லோரும் என்னுடன் உடன்பட மாட்டார்கள், ஆனால் இதுதான் உண்மை என்று தெரிவித்தார். இதுமட்டுமின்றி அத்தியாவசியப் பொருட்களுக்கு கூட கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக, உள்ளூர் கடைக்காரர்களுடன் பெண்கள் பாலியல் தொழில் செய்து உணவு, மருந்துகளை பரிமாறிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு 14 நாட்கள்தான் விசா: சிங்கப்பூர் அரசு திட்டவட்டம்
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே உள்ள தொழில்துறை பகுதியில் போலீஸ் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறையின் கீழ் இத்தகைய பாலியல் தொழில் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதுஒருபுறம் என்றால் மறுபுறம் பல பெண்கள் போலீஸ் அதிகாரிகளுடன் தூங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்வியாளர்கள் முதல் மாஃபியா கும்பல்கள் வரையிலான வாடிக்கையாளர்களின் வற்புறுத்தலின் பேரில் பெண்கள் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ள நிர்பந்திக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. வேலைவாய்ப்பில்லாமல் வேறு வழியின்றி இந்த தொழிலுக்கு பெண்கள் தள்ளப்படுவதாகவும் சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.