இந்த வைரஸ் போரில் இறுதி வெற்றி அடையும் வரை எந்த வல்லுனர் குழுவையும் நாட்டிற்குள் வந்து ஆய்வு நடத்துவதை சீனா ஒருபோதும் அனுமதிக்காது ,
கொரோனா வைரஸ் போரில் இறுதி வெற்றியை சீனா அடையும் வரை, சர்வதேச வல்லுநர் குழு விசாரணையை நாட்டிற்குள் சீனா அனுமதிக்காது என அந்நாட்டின் ஐநாவுக்கான தூதர் சென் சூ தெரிவித்துள்ளார் , முதலில் கொரோனா வைரஸை எதிர்த்து போராடுங்கள் பிறகு வைரஸ் எப்படி தோன்றியமு என்பது குறித்து விசாரித்துக் கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார் . விரைவில் சீனாவில் கொரோனா வைரஸ் குறித்து விசாரிக்க வேண்டும் என ஐநா மன்றம் தெரிவித்திருந்த நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது இதுவரையில் உலக அளவில் 37 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது . உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2.7 லட்சத்தை எட்டியுள்ளது . இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே இந்த வைரசால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது .
அதற்கடுத்தபடியாக இத்தாலி பிரான்ஸ் ஸ்பெயின் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன , இந்நிலையில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான ஆஸ்திரேலியா ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கொரோனா வைரசுக்கு சீனா தான் காரணம் என குற்றம் சாட்டி வருவதுடன் சீனாவுக்குள் நுழைந்து சர்வதேச வல்லுனர் குழு ஆய்வு நடத்த வேண்டும் அப்போதுதான் இந்த வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்ற உண்மை தெரியவரும், எனவே வல்லுனர்கள் குழுவை வுஹானில் ஆய்வு நடத்த சீனா அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர் . அதேபோல் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இக்கருத்தை தீவிரமாக வலியுறுத்தி வருவதுடன் கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் , அப்படி இருந்தால் மட்டுமே இந்த வைரஸில் இருந்து இந்த உலகம் மீள முடியும் இந்த வைரசுக்கு விரைவாக ஒரு மருந்து கண்டுபிடிக்க முடியுமென கூறிவருகிறார்.
இவரைப் போலவே இந்த வைரஸ் சீனாவின் வுஹான் வைராஸ் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் வந்தது என்றும் அதற்கான தங்களிடம் நிறைய ஆதாரங்கள் உள்ளது எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ சீனாவை தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். உலக சுகாதார நிறுவனமும் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளின் அழுத்தத்தின் காரணமாக , வைரஸ் தோன்றியதாக கருதப்படும் வுஹான் சந்தை மற்றும் வைரஸ் ஆய்வு கூடத்தில் ஒரு விசாரணை நடத்த சீனா எப்போது அனுமதிக்கும் என எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்துள்ளது . இந்நிலையில் சீனாவுக்கான ஐநா தூதர் சென் சூவிடம் செய்தியாளர்கள் இது குறித்து சில கேள்விகளை முன்வைத்தனர் , அப்போது அதற்கு பதிலளித்த அவர் இந்த வைரஸ் போரில் இறுதி வெற்றி அடையும் வரை எந்த வல்லுனர் குழுவையும் நாட்டிற்குள் வந்து ஆய்வு நடத்துவதை சீனா ஒருபோதும் அனுமதிக்காது , அதற்கான வல்லுனர் குழுவையும் சீனா அழைக்காது என திட்டவட்டமாக கூறியுள்ளார் . எங்கள் கவனம் எல்லாம் இந்த வைரசை ஒழிக்க வேண்டும் என்பதுதான் , பின்னர் எங்கள் மீது வைக்கப்படும் அபத்தமான அரசியல் வெறுப்பை எதிர்ப்பதில் கவனம் செலுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்,
தற்போதைக்கு முழுமையாக வைரசை எதிர்த்து வெற்றி பெறுவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம், வைரஸ் ஒழிப்பே சீனாவின் முதல் இலக்காக உள்ளது . அதேபோல் நாங்கள் முழு கவனத்துடன் பணியாற்ற விரும்புகிறோம் இது போன்ற இடையூறுகளை ஒருபோதும் விரும்பவில்லை. சீனா எந்த விசாரணைக்கும் எதிரானது அல்ல விசாரணைக்கு உட்பட முடியாது என்று சொல்லும் நாடும் அல்ல ஏனெனில் எதிர்கால பொது சுகாதார அவசர நிலைக்கு தயாராக சர்வதேச முயற்சிகளுக்கு அவை உதவலாம் தற்போது முதலில் உயிரை காப்பாற்றுவதற்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டியுள்ளது என சென் சூ தெரிவித்துள்ளார் வல்லுநர் குழு அனுமதிக்கப்படுமா படாதா என கேட்டதற்கு , தற்போதைக்கு எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்ற அவசியத்தில் நாங்கள் இருக்கிறோம் அதற்கு ஒரு சூழ்நிலை தேவை என அவர் கூறியுள்ளார்.