பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 40 பேருக்கு கத்திக்குத்து...?? பள்ளிக்காவலர் வெறிச்செயல்..??

By Ezhilarasan Babu  |  First Published Jun 4, 2020, 4:30 PM IST

அந்த நபர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது முதற்கட்ட விசாரசணையில் தெரியவந்துள்ளது.  


சீனாவில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் 40 மாணவர்கள் மற்றும் பணியாளர்கள், அப்பள்ளியின் பாதுகாவலரால் கத்தியால் குத்தப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது சீனாவில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சீனாவின் குவாங்சி மாகாணத்தில் இக்கொடூர சம்பவம் நடந்ததாக சீன நாளிதழான குளோபல் டைம்ஸ் அதற்கான வீடியோவை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுமார் அதில் ஆயிரக்கணக்கானோர் கொத்துக்கொத்தாக உயிரிழந்து வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

இந்த கொலைகார வைரசால் ஒட்டுமொத்த உலக நாடுகளும் முடங்கியுள்ளன. தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், பொதுப் போக்குவரத்து என உலகமே ஸ்தம்பித்து உள்ளன, தொடர் முழுஅடைப்பால் கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் இழந்து வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட இந்த வைரஸ் பரவ ஆரம்பித்து ஐந்து மாதங்கள் ஆகியும் இன்னும் அதன் கொடூரம் ஓய்ந்தபாடில்லை. ஒரு  பிரத்யேக தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாது என  மருத்துவர்கள் கூறிவரும் நிலையில், சர்வதேச அளவில் சுமார் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மருந்து ஆராய்ச்சியில் தீவிரமாக  ஈடுபட்டுள்ளன. இப்படி உலகமே கொரோனா வைரசில் சிக்கிசின்னாபின்னமாகி வரும் நிலையில்  இந்த வைரஸில் இருந்து எப்படி தப்பிப்பது என வழி தெரியாமல் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த மோசமான சூழ்நிலையிலும், ஆங்காங்கே இன்னும் மனதை உலுக்கும் கொடூர  சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் கொரோனா வைரஸ் பிறப்பிடமான  சீனாவில், தொடக்கப் பள்ளி ஒன்றில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 40 பேருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. சீனாவின் குவாங்சி மாகாணத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் இச்சம்பவம் நடந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீன நாளிதழான குளோபல் டைம்ஸ் அதற்கான வீடியோ ஆதாரத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மாணவர்களை கத்தியால் விரட்டி விரட்டி குத்திய அந்த 50 வயது பள்ளி காவலரை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்ததுடன் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த நபர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது முதற்கட்ட விசாரசணையில் தெரியவந்துள்ளது.  இந்நிலையில் சம்பவம் குறித்து தெரிவித்துள்ள உள்ளூர் மக்கள் கத்திக்குத்து தாக்குதல் கடந்த சில ஆண்டுகளாக சீனாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருவதாகவும், இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். 
 

click me!