சீன விமானங்களுக்கு அதிரடி தடைபோட்ட ட்ரம்ப்..!! எதிர்க்க துணிவில்லாமல் பதுங்கிய ஜி ஜி பிங்..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 4, 2020, 1:51 PM IST
Highlights

ஜூன் 16-ஆம் தேதி முதல் சீன நாட்டு விமானங்களை அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப் போவதில்லை என்றும், அதேபோல் அமெரிக்காவிலிருந்து சீனா செல்வதற்கு, அந்நாட்டு விமான நிறுவனங்களுக்கும் அனுமதி கிடையாது எனவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்

கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா இடையே  மோதல்  ஏற்பட்டுள்ளது, ஜூன் 16-ஆம் தேதி முதல் சீன விமானங்கள் தங்கள் நாட்டு எல்லைக்குள் பறக்ககூடாது என அமெரிக்கா தடை விதித்துள்ளது.  இது சீனாவை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால்  இதுவரை 65 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதுவரை சுமார் 3 லட்சத்து 88 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்,  எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு  இந்த வைரஸால் அமெரிக்காவே மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, கிட்டத்தட்ட அந்நாட்டில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்தை எட்டியுள்ளது, 1 லட்சத்து 9 ஆயிரம் பேர் இதுவரை அங்கு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாதான் காரணம்  எனவும், சீனா இந்த வைரஸை முன்கூட்டியே தடுத்திருக்க முடியும் எனவும், ஆனால் அது அப்படி செய்ய தவறிவிட்டது,  திட்டமிட்டே அது அப்படி நடந்து கொண்டது எனவும் அமெரிக்கா அடுக்கடுக்காக சீனா மீது குற்றம் சாட்டி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் சீனாவின் வுஹான் ஆய்வுக்கூடத்தில் இருந்தான் வைரஸ் பரவியது என அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது,  இதனால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டு, அது மோதலாக மாறியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு இயக்கக்கூடிய மூன்று விமான நிறுவனங்களும், தங்களது இயக்கத்தை நிறுத்திக் கொண்டன. அதனால் அந்த  நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்தது,  ஆனாலும் இரு நாட்டுக்கும் இடையே விமான இயக்கம் இருந்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரியில் அதன் அளவு கணிசமாக குறைந்தது, அதிலும் சீன விமானங்கள் மட்டுமே இயங்கி வந்தன.  இந்நிலையில் மார்ச் மாதத்தில் சீனாவின் விமான ஒழுங்குமுறை ஆணையம்  அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது, அதாவது நாட்டில் கொரொனா வைரஸ் மெல்ல கட்டுப்பாட்டுக்குள் வருவதால் வெளிநாடுகளிலிருந்து இயக்கக்கூடிய விமானங்களுக்கும் சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதாவது வாரத்திற்கு ஒரு வெளிநாட்டு விமானம் மட்டுமே சீனாவுக்குள் அனுமதிக்க  முடியும் என அது அறிவித்தது. 

இதனால் அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ்,  யுனைடெட் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் தங்கள் இயக்கத்தை தொடங்க சீனாவிடம் அனுமதி கோரின, ஆனால் சீனா அனுமதி வழங்க மறுத்துவிட்டது,  இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா 1980-ம் ஆண்டு விமான போக்குவரத்து ஒப்பந்தத்தை சீனா மீறிவிட்டதாக குற்றஞ்சாட்டியதுடன்,  ஜூன் 16-ஆம் தேதி முதல் சீன நாட்டு விமானங்களை அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப் போவதில்லை என்றும், அதேபோல் அமெரிக்காவிலிருந்து சீனா செல்வதற்கு, அந்நாட்டு விமான நிறுவனங்களுக்கும் அனுமதி கிடையாது எனவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க விமான நிறுவனங்களுக்கு சீனா தடைவிதித்ததன் எதிரொலியாக ட்ரம்ப் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். ஏற்கனவே தென்சீன கடல் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் இருந்துவரும் நிலையில்,  அமெரிக்கா, சீன விமானங்களுக்கு தடை விதித்திருப்பது இரு நாட்டுக்கும் இடையே போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது  என விமர்சிக்கப்படுகிறது. மேலும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் இருநாடுகளுக்கும் இடையேயான உறவுகள் மொத்தமாக துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  இதே நிலை நீடித்தால் அமெரிக்காவில் இருந்து சீனர்கள் விரைவில் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.  ஆனால் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு இதுவரை சீனா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

 

click me!