சொந்த நாட்டு மக்களையே மூடிவைத்து கழுத்தை அறுத்த சீனா..!! கேவலமான அரசியலால் நேர்ந்த கொடுமை..!!

By Ezhilarasan Babu  |  First Published Apr 16, 2020, 1:34 PM IST
பல்லாயிரக்கணக்கான மக்கள் வைரஸின் மையமான வுஹானில்  நடந்த வெகுஜன விருந்தில்  கலந்து கொண்டனர் ,  அப்போது அவர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர் . 

சீனாவில் டிசம்பர் மாதம் இறுதியில் வைரஸ் தோன்றிய நிலையில் ,  அது ஒரு பெருந்தொற்று என தெரிந்திருந்தும் அதை  மக்களுக்கு அறிவிக்க சீனா தவறிவிட்டதாக அமெரிக்க பேராசிரியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  மக்களை எச்சரிக்க சீன அதிகாரிகள்  ஒரு வாரத்திற்கும் மேலாக  தாமதப்படுத்தினர் என அவர்கள் சீனாவை குறை கூறியுள்ளனர்.  சீனாவின்  வுஹான் நகரில்  தோன்றிய கொரோனா வைரஸ்  ஒட்டுமொத்த சீனாவையும் கபளீகரம் செய்தது ,  பின்னர் அங்கிருந்து அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா என அனைத்து கண்டங்களுக்கும் பரவி சுமார் 120 க்கும் அதிகமான நாடுகளில் கோரமுகத்தை காட்டி வருகிறது .  உலக அளவில் 20 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளது ,  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து  26 ஆயிரத்தை கடந்துள்ளது .  



இந்நிலையில் அமெரிக்கா இத்தாலி ஸ்பெயின் பிரான்ஸ் ஜெர்மனி பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் இந்த வைரஸ் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளை சீனாவுக்கு எதிராக அமெரிக்கா அடுக்கிக் கொண்டே இருக்கிறது ,  இந்நிலையில் அமெரிக்கா அதிகாரிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் என தொடர்ந்து சீனாவுக்கு  எதிரான குற்றச்சாட்டுகளை பகிரங்கப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணரான ஜுயோ-ஃபெங் ஜாங் ,  கொரோனா வைரஸ் மிக பெரிய  கொள்ளை நோய்களில் ஒன்று ,  அதாவது பெருந்தொற்று ,  இந்த வைரஸ் சீனாவில் டிசம்பர் மாத இறுதியில் கண்டறியப்பட்டள்ளது, வுஹானில் வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபர் டிசம்பர் 31ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்னார்,   அப்போதிலிருந்து இந்த வைரஸ் வுஹான் மக்களிடையே வேகமாக பரவி இருக்கிறது ,  ஏராளமான மக்கள் மருத்துவமனைக்கு வர ஆரம்பித்தனர் . 
 

கிட்டத்தட்ட மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டனர் , இது ஒரு மோசமான தொற்று நோய் என அப்போது சீனாவின் அதிகாரிகளுக்கு தெரியவந்தது ,  ஆனாலும் அதை அவர்கள் மக்களிடம் அறிவிக்க மறுத்துவிட்டனர்.  கிட்டத்தட்ட ஒரு வார காலம் தாமதப்படுத்தி ஜனவரி 14ஆம்  தேதி வாக்கில் இந்த வைரஸ் ஒரு பெருந்தொற்று நோயாக உருவெடுத்துள்ளது என அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் பொதுமக்களை  எச்சரித்தார் . . பல்லாயிரக்கணக்கான மக்கள் வைரஸின் மையமான வுஹானில்  நடந்த வெகுஜன விருந்தில்  கலந்து கொண்டனர் ,  அப்போது அவர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர் .  இது ஒரு பெருந்தொற்று நோய் என அறிவிப்பதற்குள் அது பல்லாயிரக் கணக்கானோருக்கு பரவியது அதாவது ஜனவரி 5 முதல் ஜனவரி 17 வரையிலான  காலகட்டத்தில் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குவியத்தொடங்கினர்.  


 இதை முன்கூட்டியே மக்களுக்கு அறிவித்திருந்தால் பெரும் தொற்றை  அப்போதே தடுத்திருக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார் .  இதேபோல சிக்காக்கோ பல்கலைக் கழகத்தின் சீன அரசியலின் பேராசிரியரான டாலி யாங் ,  பல அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார் ,  அதாவது இந்த வைரஸ் பெரும் தொற்றாக மாறியதை மக்கள் மத்தியில் அறிவிக்க காலதாமதம் செய்தது மட்டுமல்லாமல் ஒரு மோசமான செய்தியை மக்கள் மத்தியில் எப்படி சொல்லுவது என்ற எண்ணமும் சீன அரசியலில் உள்ள வெளிப்படைத் தன்மை இல்லாத போக்கும் ,  அரசியலில்  உள்ள அதிகார தடைகளும் மக்களை எச்சரிக்க தடையாக இருந்துள்ளது .அதுமட்டுமல்லாது ஜனவரி 2 ஆம் தேதி தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு அறிவிப்பில் வைரஸ் தொடர்பாக வதந்தி பரப்பியதாக கூறி 8 மருத்துவர்கள் தண்டிக்கப்பட்டனர் என செய்தி வெளியானது ,  



அதேபோல் சீனாவில் எத்தனை பேர் நோயால் பாதிக்கப்பட்டனர் என்பதை சீனா முற்றிலுமாக மறைத்து விட்டது ,   வெளிப்படைத் தன்மை இல்லாத அரசியலை அது கையாண்டது ,  அதேபோல் சீனாவில் தொற்று நோய்க்கு எதிரான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வில்லை ,   ஜனவரி 13 ஆம் தேதி அன்று கொரோனாவுக்கு  எதிராக தாய்லாந்து , மருத்துவ நடவடிக்கைகளில் இறங்கிய  பின்னர் தான் சீனா அதில் கவனம் செலுத்தத் தொடங்கியது பொதுமக்களுக்கு என்ன வென்று அறிவிக்காமல் பொதுமக்களை பரிசோதனை செய்தது ,  சோதனைக் கருவிகளை நாடு முழுக்க  விநியோகிக்க தொடங்கியது, மொத்த த்தில் சீனாவில் இருப்பது  வெளிப்படைத்தன்மை இல்லாத அரசு என அவர் குற்றம் சாட்டியுள்ளார் .

 
click me!