உலகம் முழுக்க கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில் , கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 2482 பேர் உயிரிழந்துள்ளனர் . இது உலக நாடுகளை பீதியில் உறைய வைத்துள்ளது . கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் ஹூபே மாகாணம் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், அமெரிக்கா , ஐரோப்பா, ஆப்பிரிக்கா, என அனைத்து கண்டங்களிலும் தனது கொடூர கரத்தை படரவிட்டுள்ளது. இதுவரை 210க்கும் அதிகமான நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வரும் இந்த வைரஸ் பெரும் மனிதப் பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது . உலக அளவில் சுமார் 20 லட்சத்து 84 ஆயிரத்து 733 பேருக்குஒ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . 1 லட்சத்து 34 ஆயிரத்து 685 பேர் இதுவரை இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ளனர் . 21 ஆம் நூற்றாண்டில் மனித சமூகம் சந்தித்திராத பேரழிவாக இது கருதப்படுகிறது .
இத்தாலி , ஸ்பெயின் , பிரான்ஸ் , ஜெர்மனி , பிரிட்டன் , ஈரான் , துருக்கி , பெல்ஜியம் என 20க்கும் மேற்பட்ட நாடுகள் மிக மிக கொரூரமாக பாதிக்கப்பட்டுள்ளன . ஆனால் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் வைரஸ் கொடுமை அதிகமாக உள்ளது. இதுவரையில் அமெரிக்காவில் 6 லட்சத்து 44 ஆயிரத்து 348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . ஒரு மணி நேரத்திற்கு 700 முதல் 800 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர் . மொத்தத்தில் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 554 ஆக அதிகரித்துள்ளது . பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருந்து வரும் நிலையில் ஆனால் வைரஸிலிருந்து குணமாடைந்துள்ளவர்களின் எண்ணிக்கையோ மிக மிக சொற்பமாக உள்ளது .
இதுவரை அங்கு 48 ஆயிரத்து 208 பேர் மட்டுமே குணமடைந்துள்ளனர் . 5 லட்சத்து 67 ஆயிரத்து 86 பேர் இன்னும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் , சுமார் 13 ஆயிரத்து 487 பேர் ஐசியுவில் வென்டிலேட்டர் உதவியுடன் வைரசுடன் உயிர் போரிட்டம் நடத்தி வருகின்றனர். இது அமெரிக்காவில் வரலாறு காணாத பேரிழப்பாக கருதப்படுகிறது . சீனாவில் இந்த வைரஸ் பரவியபோதே ஏன் இதை உலகநாடுகளுக்கு அறிவிக்கவில்லை என அமெரிக்கா தொடர்ந்து சீனாவையும் உலக சுகாதார நிறுவனத்தையும் கடுமையாக சாடிவருகிறது.
மொத்தத்தில் வல்லரசு நாடான அமெரிக்கா இந்த வைரஸில் இருந்து எப்படி தப்பிப்பது என்பது தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது என்றுதான் சொல்ல வேண்டும், இந்நிலையில் இது குறித்து தெரிவிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் , கொரோனா அமெரிக்காவை சூறையாடி வரும் நிலையில் மறுபக்கம் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது என்ன செய்வது என்றே தெரியவில்லை என ஊடகத்தினர் முன் வேதனைகளை கொட்டித் தீர்த்து வருகிறார். அமெரிக்காவில் தற்போது இந்தப் வைரசின் வெறியாட்டம் முடிவுக்கு வராது என வாஷிங்டன் பல்கலைக்கழக சுகாதார அளவிட்டு நிறுவனம் ஏற்கனவே எச்சரித்துள்ளது, அதாவது அமெரிக்காவில் கொரோனா வைரஸ் இன்னும் ஒருசில தினங்களில் உச்சத்தை எட்டும் என்றும் ,
அது உச்ச கட்டத்தை அடையும் போது நாள் ஒன்றுக்கு குறைந்தது 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என்றும், அதனடிப்படையில் கிட்டத்தட்ட அமெரிக்காவில் ஆகஸ்ட் மாதத்திற்குள் சுமார் 81 ஆயிரத்து 766 பேர் உயிரிழக்கக் கூடும் என்றும் அந்நிறுவனம் எச்சரித்துள்ளது. இந் நிலையில் அச்சுகாதார நிறுவனம் கணித்ததை போலவே, அங்கு உயிரிழப்புகள் திடீரென பன்மடங்காக உயரத்தொடங்கியுள்ளது. குறிப்பிடதக்கது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 2482 பேர் உயிரிழந்துள்ளனர் , இதனால் ஒட்டுமொத்த அமெரிக்காவும் உயிர் பயத்தில் உறைந்துள்ளது.