சினாவில் உருவானது தடுப்பூசி, மனித பரிசோதனைக்கு அனுமதி..!! நாட்டின் எல்லைகளை கண்காணிக்க ஜிஜின்பிங் தீவிரம்..!!

By Ezhilarasan Babu  |  First Published Apr 14, 2020, 5:19 PM IST

இந்நிலையில்  நிலையில் அந்த வழித்தடத்தில் நாட்டிற்குள் நுழையும் அனைவருக்கும் கொரோனா  வைரஸ் பரிசோதனை செய்யப்படுகிறது . யுனான் மாகாணத்தில் தென்மேற்கு எல்லை வழியாக சீனாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக மார்ச் மாதத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பில் சீனா தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில்,  அந்த மருந்துகளை மனித பரிசோதனைக்கு உட்படுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது   அதே நேரத்தில் நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதை  தடுக்கும் வகையில் நாட்டின் எல்லைகளை தீவிரமாக கண்காணிக்கவும் சீனா முடிவு செய்துள்ளது .  இதனால் ரஷ்யா-சீனா எல்லைகளில் கண்காணிப்பு முகாம்களை அமைத்து வைரஸ் பாதித்தவர்கள் நாட்டிற்குள் ஊடுருவுவதை தடுப்பதற்கான முயற்ச்சியில் சீனா இறங்கியுள்ளது. இதற்காக மாகாண அரசுக்களுக்கு அது தீவிர நடவடிக்கையில் உறங்கும்படி உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் ,  சீனாவில் அந்த வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது,  இதனால்  சீனாவில் வுஹான் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  சில வாரங்கள் வைரஸ் தொற்று முற்றிலுமாக தடுக்கப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் சீனாவில்  புதிய வைரஸ் தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது . 

Latest Videos

இதுகுறித்து தெரிவிக்கும் சீனா இந்த வைரஸ்கள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து  நாடு திரும்பியவர்களால்  உருவானது என்றும் குறிப்பாக ரஷ்ய நாட்டில் இருந்து சீனாவுக்கு திரும்பியவர்களால் வந்தது  என்றும்  சீனா குற்றம்சாட்டியுள்ளது.  வெளிநாட்டிலுள்ள சீனர்கள் நாடு திரும்ப வேண்டாமெனவும் சீன தன் குடிமக்களுக்கு எச்சரித்துள்ளது .  இந்நிலையில் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளார் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் தினசரி,  ரஷ்யா கொரோனாவால் கடுமையாக  பாதிக்கப்பட்டு வருகிறது அதை சீன மக்கள் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும் , ஏனென்றால் சீனாவில் மீண்டும் வைரஸ் பரவுவதற்கு  வாய்ப்புகள் அதிகம் உள்ளது,  நாம் அதை தவிர்க்க வேண்டும் என அந்த நாளிதழில்  தலையங்கம் எழுதப்பட்டுள்ளது .  இந்நிலையில் சீனாவின் வடகிழக்கு எல்லை மாகாணமான ஹிலோங்ஜியாங்கில்
கடந்த திங்கட்கிழமை அன்று புதிதாக  73 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .  அவர்கள் அனைவரும் ரஷ்யாவிலிருந்து நாடு திரும்பியவர்கள் என அரசு தெரிவித்துள்ளது . அதே நேரத்தில் சட்ட விரோத குடியேற்றங்கள் மூலமாகவும் வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது என சீனாவுக்கு தகவல் வந்துள்ளது.  இதனால், 

ஹிலோங்ஜியாங் மாகாண அரசு நாட்டின் எல்லையில் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் குறித்து தகவல் அளித்தால் , தகவல் கொடுப்பவர்க்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது ,  சட்டவிரோதமாக எல்லைகளைத்  தாண்டுபவர்கள்  குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு மூன்றாயிரம் யுவான், வழங்கப்படும் என்றும், சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்த அதிகாரிகளிடம் ஒப்படைத்தால்  5 ஆயிரம் யுவான் வழங்கப்படும் என்றும்  அரசு அறிவித்துள்ளது, இந்நிலையில் சீனாவின் நீண்ட எல்லைகளை  கண்காணிப்பது சவாலான விஷயம் என்றாலும், எல்லையை  ஒட்டியுள்ள ஏராளமான நாடுகளின் சாலைகள் ,  பாதைகள் ,  நீர் வழித்தடங்கள் ,  மற்றும் மலைப்பாதைகள் , ஆகியவற்றின் மூலம் நடைபெறும் ஊடுருவல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் ரஷ்ய சீன எல்லையில் இருந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட யாரும் சீனாவிற்குள்  வந்து விடக்கூடாது என்பதை கண்காணிக்க சீனா ஹைலோங்ஜியாங்கில் உள்ள ஒரு சிறிய நகரமான சூஃபென்ஹேயில் சோதனைச்சாவடி அமைத்துள்ளது. 

இந்நிலையில்  நிலையில் அந்த வழித்தடத்தில் நாட்டிற்குள் நுழையும் அனைவருக்கும் கொரோனா  வைரஸ் பரிசோதனை செய்யப்படுகிறது . யுனான் மாகாணத்தில் தென்மேற்கு எல்லை வழியாக சீனாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக மார்ச் மாதத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இம்மாத தொடக்கத்தில் லாவோஸ் மற்றும் மியான்மரில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வேலைதேடி சீனாவுக்கு ஊடுருவியுள்ளதும் தெரியவந்துள்ளது... இந்நிலையில் கொரோனா வைரசை தடுக்க  பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட நாஸ்டாக்-பட்டியலிடப்பட்ட சினோவாக் பயோடெக் மற்றும் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் பயோலாஜிகல் ப்ராடக்ட்ஸ், அரசுக்கு சொந்தமான சீனா தேசிய மருந்துக் குழுவின் இணை தடுப்பூசி உருவாக்கி வருகின்றனர். 

 

இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில், இராணுவ ஆதரவுடைய சீனாவின் இராணுவ மருத்துவ அறிவியல் அகாடமி மற்றும் எச்.கே- என்ற பயோடெக் நிறுவனமான கன்சினோ பயோ ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசியை மனித சோதனைக்கு உட்படுத்த  சீனா அனுமதி வழங்கியுள்ளது  அமெரிக்க மருந்து உருவாக்குநரான மாடர்னா மனித சோதனைகளைத் தொடங்கியதாகக் கூறிய சில நாட்களிலேயே சீனா இந்த ஆராய்ச்சியை தொடங்கியது குறிப்பிடதக்கது.  
 

click me!