உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸை கடத்திவிட்டு, சீனா இப்போது தென் சீனக் கடலில் மிகப்பெரிய ஆக்ரோசமான விளையாட்டு விளையாடி வருகிறது
அமெரிக்க சிலநாட்களாக கொரோனாவை சீனா உருவாக்கிய வைரஸ் என சொல்லி வந்தது. ஆனால், இப்போது அப்படி சொல்வது கிடையாது. சீனாவும், அமெரிக்காவும் மிகப்பெரிய அளவில் மருத்துவ சேவைகளில் ஈடுபடுகிறோம். இந்த கொரோனாவை விரட்டி அடிக்கப்போகிறோம் என கூறி வருகிறார்கள். ஆனால், தைவான் மட்டும் இது சீன உருவாக்கிய வைரஸ் தான் என்று தைரியமாக சொல்லி வருகிறது. தைவானுக்கும், சீனாவுக்கும் ஆகவே ஆகாது.
இப்போது சீனாவை எதிர்த்து வியட்நாம் என்ற நாடும் வந்துவிட்டது. இப்போது தென் சீன விவகாரம் ஞாபகத்திற்கு வர வேண்டும். நைண்டேஸ் லைன் என்கிற திட்டத்தை போட்டு சீனக்கடலோரம் பல ஆயிரம் கிலோமீட்டர் அனைத்து எனக்கு மட்டுமே சொந்தம் என சீனா சொல்லிக் கொண்டு வருகிறது. அதனை எதிர்த்து வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான் போன்ற நாடுகளில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி வருகின்றது.
அதை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் இப்போது கொரோனா வைரஸ் என் நாட்டை விட்டு ஓடிவிட்டது. மறுபடியும் ராஜாவாக வந்து நிற்பேன் எனச்சொல்லி இப்போது தென்சீன கடற்கரையில் தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது சீனா. அதுமட்டுமல்லாது வியட்நாமினுடைய ஒரு மீன்பிடி படகை அடித்து காலி செய்து விட்டது சீனா. இது வியட்நாமிற்கு மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தி விட்டது’’ உலக நாடுகளே இதனை கவனியுங்கள்.
உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸை கடத்திவிட்டு, சீனா இப்போது தென் சீனக் கடலில் மிகப்பெரிய ஆக்ரோசமான விளையாட்டு விளையாடி வருகிறது’’ எனக் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இதெல்லாம் கொரோனா செய்திக்கு முன் தூசி போல கடந்து சென்றுகொண்டிருக்கிறது.
இதற்கு ஆதரவாக தைவான் குரல் கொடுக்க போகிறது. ஆகையால் மீண்டும் தென் சீனக் கடலில் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் உருவாகிவிட்டது. இந்த ஒரு நேரத்தை பயன்படுத்தி நிறைய நாடுகள் மற்ற நாடுகள் மீது போர் தொடுக்க வாய்ப்புகள் இருக்கிறது. எல்லா நாடுகளும் பொருளாதார ரீதியாக அடிபட்டு கிடக்கும் போது ’இவனை அடித்தால் இவன் வழிக்கு வந்துவிடுவான்’ என மற்ற நாடுகள் திட்டம் போட்டு வருகின்றன.