அமெரிக்காவில் பல மாகாணங்களில் நிகழ்ந்த இறப்பு விகிதத்தை ஆராய்ந்த போது, 40 சதவீத்தில் இருந்து 70 சதவீதம் வரை கருப்பின மக்கள் அதிகமாக இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், ஐரோப்பாவை தொடர்ந்து அமெரிக்காவில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. அந்நாட்டில், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 2000 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள மாகாணங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் நியூயார்க் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் நியூஜெர்சி மாகாணம் பிடித்துள்ளது. மிக்சிகன் மாகாணம் 3ம் இடத்திலும், கலிபோர்னியா மாகாணம் 4வது இடத்திலும், 5ம் இடத்தில் லூசியானா மாகாணம் உள்ளது.
இரண்டாம் உலகப் போர், பெல் ஹார்பர் தாக்குதல்களை விட கொடுமையான விஷயத்தை அமெரிக்கா அனுபவித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள், விஞ்ஞானிகள், பொருளாதார வல்லுநர்கள் ஆகியோர் கவலை தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் மரணிப்பது அமெரிக்கர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: “வாத்திங் கம்மிங்” பாட்டுக்கு மரண மாஸ் டான்ஸ்... வேற லெவலில் வைரலாகும் மைனா நந்தினி வெர்ஷன்...!
இந்நிலையில் அமெரிக்காவில் பல மாகாணங்களில் நிகழ்ந்த இறப்பு விகிதத்தை ஆராய்ந்த போது, 40 சதவீத்தில் இருந்து 70 சதவீதம் வரை கருப்பின மக்கள் அதிகமாக இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சாதாரண மக்களின் இறப்பை விட கறுப்பு நிற மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் இறப்பு விகிதம் 6 மடங்கு அதிகரிக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரபல நடிகரின் காதலுக்கு ‘நோ’ சொன்ன கீர்த்தி சுரேஷ்... அந்த நடிகரை காதலிக்கிறாராம்?
லூசியானாவில் 70 சதவீதமும், மிச்சிகன் மாநிலத்தில் 14 சதவீத கறுப்பினத்தவர்களே வசித்து வரும் போதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 சதவீதமாக உள்ளது. இலினாய்ஸ் மாநிலத்தில் 43 சதவீத கறுப்புனத்தவர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கல்வி, அடிமட்ட வேலை, சுகாதாரமாக வாழ முடியாத நிலை ஆகியவற்றால் கறுப்பின மக்கள் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக அமெரிக்க தொற்றியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.